இப்படி சொன்னது ஒரு குத்தமா? காஜலை வம்புக்கு இழுத்து பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்! கொஞ்சம் ஓவராதான் போறாரோ..!
நடிகை காஜல் அகர்வாலை, திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், பங்கமாக கலாய்த்து மீம்ஸ் போட்டு பங்கம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் காஜல் அகர்வால். திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்பும், தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வரும் காஜல் அகர்வால், தற்போது உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில்... பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் 70 வயது பாட்டி வேடத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பது மட்டும் இன்றி, இப்படத்திற்காக களரி, குதிரை ஏற்றம், போன்ற பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில், நடிகர் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பு காஜல் திருமணத்திற்கு முன்பு தொடங்கி இருந்தாலும்,கொரோனா பிரச்சனை மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து, மற்றும் தனிப்பட்ட சில காரணங்களால் மூன்று வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை படபிடிப்பு பணிகள் நிறைவடையாமல் உள்ளது.
இந்நிலையில் மீண்டும் தற்போது படப்பிடிப்பு துவங்கி உள்ள நிலையில், காஜல் அகர்வாலும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் காஜல் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய மகனுக்கு எட்டு வயது நிரம்பியதும், அவனுக்கு முதலில் தான் நடித்த துப்பாக்கி படத்தை தான் காட்டுவேன். அதே போல் எட்டு வயது நிரம்பும் வரை செல்போன் பயன்படுத்தவோ, திரைப்படங்கள் பார்க்கவோ அனுமதிக்க மாட்டேன் என கூறி இருந்தார்.
இதையடுத்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், தன்னுடைய twitter பக்கத்தில் வடிவேலு மீம்ஸ் ஒன்றை ஷேர் செய்து காஜல் அகர்வாலை பங்கமாக கலாய்த்துள்ளார். அந்த மீம்ஸில் தப்பி தவறி கூட விவேகம் படத்தை காட்டிடாதீங்க மேடம், என்கிற கேப்ஷன் இடம்பெற்றுள்ளது. இவரின் பதிவுக்கு காஜல் அகர்வாலின் ரசிகர்கள், அவங்க படம் பற்றி கூறியது ஒரு குத்தமா? இப்படி கலக்குறீங்க என ஜாலியாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.