புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர்! பிரபல நடிகர் கோரிக்கை!

நடிகர் சங்க கட்டிடத்திற்கு, கேப்டன் விஜயகாந்தின் பெயரை வைக்க வேண்டும் என, பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.
 

Famous actor request Vijayakanth name for the newly constructed nadigar sangam  building

நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, நடிகர் சங்க கடனை அடைத்த நடிகர் விஜயகாந்த்க்கு பாராட்டு விழா நடத்தப்படும் என விஷால் நேற்று அறிவித்த நிலையில், நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என பிரபல நடிகர் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஆக்சன் ஹீரோவாக கொடிகட்டி பறந்தவர் விஜயகாந்த். நடிப்பை தொடர்ந்து அரசியலிலும் கால் பதித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர். குறிப்பாக நடிகர் சங்க தலைவராக இவர் பொறுப்பில் இருந்த போது, நடிகர் சங்க பத்திரத்தை அடமானம் வைத்து வாங்கப்பட்ட கடன்களை கலை விழா நடத்தி, அதன் மூலம் வந்த பணத்தை கொண்டு கடனை அடைத்த நிலையில், நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தவர்.

எதிர்நீச்சல் சீரியலால் வந்த வினை..! ஷூட்டிங் முடிந்ததும்... மருத்துவமனைக்கு ஓடிய ஜான்சி ராணி! ஏன் தெரியுமா?

Famous actor request Vijayakanth name for the newly constructed nadigar sangam  building

இந்நிலையில் நேற்று நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மார்க் ஆண்டனி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நடிகர் சங்க கட்டிடம் சரியாக இன்னும் ஒரு ஆண்டுக்குள் கட்டி  முடிக்கப்படும் என்றும், அதில் தேமுக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த்துக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

வித் அவுட் மேக்கப்பில்.. ரம்யா பாண்டியனை காப்பி அடித்து மொட்டை மாடியில்.. கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய அனுபமா!

Famous actor request Vijayakanth name for the newly constructed nadigar sangam  building

இதை எடுத்து நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்தின் பெயரை வைக்க வேண்டும் என மீசை ராஜேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நேற்று நடிகர் விஷால்...நடிகர் சங்க புதிய கட்டிடத்தில் விஜயகாந்த் அவர்களுக்கு பாராட்டு விழா எடுப்போம் என கூறியிருந்தார். விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பல நடிகர்களை உருவாக்கியவர். பல இயக்குனர்களை உருவாக்கியவர். நடிகர் சங்க கடனை அடைந்தவர். எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்தவர். ஆகவே, பாராட்டு விழாவோடு நடிகர் சங்க புதிய கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைப்பதை சரியாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Exclusive: முதல் முறையாக இரட்டை குழந்தைகளை வெளியுலகிற்கு காட்டிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்! வைரல் போட்டோஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios