வித் அவுட் மேக்கப்பில்.. ரம்யா பாண்டியனை காப்பி அடித்து மொட்டை மாடியில்.. கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய அனுபமா!
நடிகை ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் விதமாக, நடிகை அனுபமா பரமேஸ்வரன் தாறுமாறாக சேலை கட்டி, அவரை காப்பி அடிப்பது போல் எடுத்து வெளியிட்டுள்ள மொட்டை மாடி போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை சாய் பல்லவி அறிமுகமான ப்ரேமம் படத்தின் மூலம், திரையுலகில் அறிமுகமானவர் தான் இந்த சுருட்டை முடி அழகியான, அனுபமா பரமேஸ்வரன்.
இவர் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் பட லிஸ்டில் இணைந்ததால், இந்த படத்தின் மூலம் அறிமுகமான, அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் என மூவருக்குமே பட வாய்ப்புகள் குவிந்தது.
மலையாளத்தை தொடந்து, தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'கொடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார், அனுபமா பரமேஸ்வரன்.
ஆனால் துரதிஷ்ட வசமாக இந்த படம் படு தோல்வி அடைந்ததால், இவருக்கு அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் அதிரடியாக தெலுங்கு திரையுலகிற்கு சென்றார்.
இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு வாக்களித்த நடிகர் சூர்யா! அவரை பகிர்ந்த ஸ்க்ரீன் ஷார்ட!
தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகர்களுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்த, படங்கள் ஆரம்பத்தில் வெற்றிபெற வில்லை என்றாலும், தற்போது தெலுங்கில் முன்னணி இடத்தை கைப்பற்றியுள்ளார்.
குறிப்பாக சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கார்த்திகேயா 2 திரைப்படம், அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, விரைவில் ஹிந்தியிலும் இவர் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இவரின் கைவசம் தமிழில் சைரன் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் உள்ள நிலையில், பட வாய்ப்புகளை கைப்பற்ற விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி பட வேட்டை நடத்தி வருகிறார்.
அந்த வகையில், கருப்பு நிற சேலையில்... கன்னா... பின்னா கவர்ச்சி காட்டி, அனுபமா பரமேஸ்வரன் மொட்டை மாடி போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சம்பள விஷயத்தில் நயன்தாராவை ஊதி தள்ளிய தீபிகா படுகோன்! தெலுங்கு படத்தில் நடிக்க இத்தனை கோடியா?
இதை பார்த்து ரசிகர்கள் பலர் ரம்யா பாண்டியனின் மொட்டை மாடி போட்டோ ஷூட்டை, அனுபமா காப்பி அடித்து, சற்று தூக்கலான கவர்ச்சியை காட்டியுள்ளதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.