சம்பள விஷயத்தில் நயன்தாராவை ஊதி தள்ளிய தீபிகா படுகோன்! தெலுங்கு படத்தில் நடிக்க இத்தனை கோடியா?
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அதிக சம்பளம் பெரும் நடிகைகள் பட்டியலில் நயன்தாரா இருந்த நிலையில், அவரை விட பல கோடி சம்பளம் அதிகமாக நடிகை தீபிகா படுகோன் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை நயன்தாரா தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க மூன்று முதல் நான்கு கோடி வரை சம்பளமாக பெறுகிறார். இவர் கதையின் நாயகியாக நடித்த அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவியதால், சம்பளத்தை குறைத்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Nayanthara
ஆனால் நடிகை நயன்தாராவையே சம்பள விஷயத்தில் ஓரம் கட்டியுள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். 'மகாநடி' படத்தின் மூலம், இயக்குனராக அறிமுகமாகி.. தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்று, முன்னணி இயக்குனர்களை திரும்பி பார்க்க வைத்தவர் நாக் அஷ்வின். இவர் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ப்ரோஜெக்ட் கே.
முதுகை முழுவதும் காட்டி.. வினோதமான சிகை அலங்காரத்துடன்! ஸ்ருதி ஹாசன் நடத்திய கிளாமர் போட்டோ ஷூட்!
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார். தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 'ப்ரோஜெக்ட் கே' படத்தில் நடிக்க, தீபிகா படுகோன் 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற உள்ளதாக கூறப்படுகிறது. இது நயன்தாரா வாங்கும் சம்பளத்தை இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த தகவல் குறித்து எவ்வித அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாக வில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றையும் ப்ரொஜெக் கே படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தது. அந்த போஸ்டரில் தீபிகாவின் முகம் தெரியவில்லை. அவள் ஒரு போர்வீரனைப் போல் உடையணிந்து சூரியனுக்கு எதிராக நிற்பதை பார்க்க முடிந்தது மேலும் அதர்க்கு “இருட்டில் ஒரு நம்பிக்கை” என்று கேப்ஷன் கொடுத்திருந்தனர். இப்படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.