குழந்தையாக இருக்கும் போது சிறுவர் மலர் அட்டை படத்தில் தங்கையுடன் இடம்பெற்ற ரம்யா பாண்டியன்! அரிய புகைப்படம்!
நடிகை ரம்யா பாண்டியன், 1993 ஆம் ஆண்டு வெளியான சிறுவர் மலர் புத்தகத்தின் அட்டை படத்தில் இடப்பெற்றிருந்த அரிய புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். கேரளா, ஆந்திராவை சேர்ந்த நடிகைகளின் ஆதிக்கமே தமிழ் சினிமாவில் தற்போது வரை அதிகமாக இருந்தாலும், தமிழகத்தை சேர்ந்த நடிகைகளும் , திரையுலகில் அடியெடுத்து வைத்து, சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வர துவங்கி விட்டனர்.
அந்த வகையில் திருநெல்வேலியில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த ரம்யா பாண்டியன், சென்னையில் படித்து... நடிக்க வேண்டும் என்கிற ஆசையால்... தொடர்ந்து பல்வேறு சவால்களை கடந்து, டம்மி டப்பாசு, ஜோக்கர் போன்ற படங்களால் ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றவர் ரம்யா பாண்டியன்.
சார்பட்டா 2 படத்திற்காக சண்டையை கைவிட்ட சந்தோஷ் நாராயணன்! சமாதானம் ஆவாரா பா.ரஞ்சித்?
தமிழில் தற்போது இடும்பன்காரி என்கிற படத்தில் நடித்து வரும் ரம்யா பாண்டியன், கடைசியாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
வெள்ளித்திரை மட்டும் இன்றி சின்னத்திரையிலும், குக் வித் கோமாளி, பிக்பாஸ் சீசன் 4 மற்றும் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
திரையுலகில் அதிர்ச்சி..! பிரபல நடிகர் பாலா மருத்துவமனையில் அனுமதி! ICU-வில் தீவிர சிகிச்சை..!
மேலும் விதவிதமான போட்டோ ஷூட்டிலும் ரசிகர்களை கிறங்கடித்து வரும் ரம்யா பாண்டியனின், சிறிய வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 18.06.1993 ஆம் ஆண்டு வெளியான சிறுவர் மலர் புத்தகத்தில் ரம்யா பாண்டியன் தன்னுடைய தங்கை சுந்தரி திவ்யாவுடன் இடம்பெற்றுள்ளார். இந்த அட்டை படத்தில் வலது ஓரம் இருப்பவர் ரம்யாபாண்டியன். இந்த அரிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.