திரையுலகில் அதிர்ச்சி..! பிரபல நடிகர் பாலா மருத்துவமனையில் அனுமதி! ICU-வில் தீவிர சிகிச்சை..!
நடிகர் பாலா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது ஐ சி யூ வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகி உள்ள தகவல், திரையுலகினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
actor bala
மலையாள மற்றும் தமிழில் ஹீரோவாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர் பாலா. இவர் தமிழில் காதல் கிசுகிசு, அன்பு, போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
actor இந்நிலையில் இவருக்கு திடீரென கடந்த வாரம் உடல் நலம் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கொச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்ற பாலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கல்லீரலில் பிரச்சனை இருப்பதாக கூறியதை தொடர்ந்து, மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஐ சி யு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பாலாவின் முன்னாள் மனைவி அம்ரிதா, அவருடைய மகள், தாயார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் தற்போது மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளதாக தெரிகிறது. அதே போல் நாளைய தினம் பிரபல இயக்குனரும், பாலாவின் உடன் பிறந்த சகோதரருமான சிறுத்தை சிவா கொச்சிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் பாலா கடந்த 2010 ஆம் ஆண்டு, பிரபல மலையாள பாடகியான அமிர்தா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்கிற மகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பாலாவும் அமிர்தாவும் கடந்த 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதை அடுத்து கடந்த ஆண்டு பாலா எலிசபெத் என்கிற மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடமே ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் பரவியது. இது குறித்து பாலாவும் உறுதி படுத்தார். எனினும் பாலா தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் நட்பு ரீதியாக தொடர்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலாவின் உடல்நிலை குறித்து, மருத்துவமனை தரப்பில் இருந்து... எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில், விரைவில்... அவரின் உடல்நிலை சரியாக வேண்டும் என ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.