காலில் மிகப்பெரிய கட்டோடு... எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்! என்ன ஆச்சு?
'எதிர்நீச்சல்' சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும்... நடிகை கனிகா காலில் மிகப்பெரிய கட்டோடு வெளியிட்டுள்ள புகைப்படம் இவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான, '5 ஸ்டார்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கனிகா. இதை தொடர்ந்து, மாதவனுடன் எதிரி, சேரனுக்கு ஜோடியாக ஆட்டோகிராப், மற்றும் அஜித்துக்கு ஜோடியாக வரலாறு போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.
தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாள படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ள கனிகா, தமிழில் ஜெனிலியா, சதா, ஸ்ரேயா போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
லால் சலாம் படத்தின் முக்கிய அறிவிப்பை போஸ்டருடன் வெளியிட்டு... வாழ்த்து கூறிய லைகா!
திருமணத்திற்கு பிறகும் மலையாளத்தில் சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் கனிகா, தமிழில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும், 'எதிர்நீச்சல்' சீரியலில் ஈஸ்வரி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகினார்.
இந்த சீரியலில் ஆணாதிக்கம் பிடித்த மனிதராக இருக்கும் குணசேகரனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுயமரியாதை கொண்ட பெண்ணாக இருந்தும், மாமியார், கணவனுக்கு அடங்கி போகும் மனோபாவம் கொண்ட பெண். பல நேரங்களில் கோபத்தை அடக்கி கொண்டு செல்லும் இவரின் கதாபாத்திரம், தற்போது சூடு பிடிக்க துவங்கியுள்ளது. கணவன் செய்யும் அநியாயங்களுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்.
பெண்ணால் எதுவும் முடியும்... சோதனைகளை கடந்து தமிழ் சினிமாவில் சாதனை படைத்த பெண் இயக்குனர்கள்!
இந்நிலயில் இவர் கீழே விழுந்ததில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதற்காக காலில் பெரிய கட்டுடன் பூட்ஸ் போட்டு கொண்டு நடக்க பழகி விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது, சமூக வளைத்ததில் வைரலாகி வருவதோடு, ரசிகர்களும் விரைவில் குணமடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.