லால் சலாம் படத்தின் முக்கிய அறிவிப்பை போஸ்டருடன் வெளியிட்டு... வாழ்த்து கூறிய லைகா!
'லால் சலாம்' படத்தின் முக்கிய அறிவிப்பை போஸ்டர் உடன் வெளியிட்டு அறிவித்துள்ள லைகா நிறுவனம் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.
காதல் கணவர் தனுஷை விவாகரத்து செய்த பின்னர், தீவிரமாக திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நீண்ட இடைவெளிக்கு பின்னர் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து 'லால் சலாம்' என்கிற திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் ஹீரோவாக நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தில் 80-களில் முன்னணி நடிகையாக இருந்த ஜீவிதா, இணைத்துள்ள தகவல் வெளியானதை தொடர்ந்து, இந்த தகவலை நடிகை ஜீவிதாவும் உறுதி செய்தார். ரஜினியின் தங்கை கதாபாத்திரத்தில் ஜீவிதா இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுப்பது பற்றி மிகவும் உற்சாகமாக பகிர்ந்து கொண்டார்.
பெண்ணால் எதுவும் முடியும்... சோதனைகளை கடந்து தமிழ் சினிமாவில் சாதனை படைத்த பெண் இயக்குனர்கள்!
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கி உள்ளதாக, இந்த படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் ரசிகர்களுக்கு ஹோலி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியில் நடைபெற உள்ளதாகவும், இதில் ரஜினிகாந்த் மற்றும் ஜீவிதா ஆகியோர் இணைந்து நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.