மருந்து வாங்க கூட காசு இல்லாமல் தவிக்கும் தயாரிப்பாளர் விஏ துரையிடம் 25 லட்சத்தை அபேஸ் செய்த இயக்குனர் பாலா!
தயாரிப்பாளர் விஏ துரை தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல், அல்லாடி வரும் நிலையில், இயக்குனர் பாலா 25 லட்சத்தை அபேஸ் செய்த தகவல் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜ் நடித்த 'என்னம்மா கண்ணு' என்கிற திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தயாரிப்பாளர் விஏ துரை. இது மட்டுமின்றி தேசிய விருது பெற்ற பிதாமகன், விஜயகாந்த் நடித்த கஜேந்திரா, ரஜினிகாந்த் நடித்த பாபா, போன்ற பிக் பட்ஜெட் படங்களையும் தயாரித்துள்ளார்.
இவர் இயக்கத்தில் வெளியான சிறு பட்ஜெட் படங்கள் கூட இவருக்கு லாபத்தை கொடுத்த நிலையில், விஜயகாந்த் நடித்த கஜேந்திரா மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா போன்ற படங்கள் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. இதையடுத்து மிகுந்த பண நெருக்கடிக்கு ஆளான தயாரிப்பாளர் வி ஏ துரை, தன்னுடைய சொத்துபத்தை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டது.
பெண்ணால் எதுவும் முடியும்... சோதனைகளை கடந்து தமிழ் சினிமாவில் சாதனை படைத்த பெண் இயக்குனர்கள்!
இவருடைய மனைவி மற்றும் மகளும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாகவே இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்ட நிலையில், தற்போது தங்குவதற்கு வீடு கூட இல்லாமல், தன்னுடைய நண்பர் ஒருவரின் உதவியால் வாடகை வீட்டில் வசித்து வரும் துரைக்கு நீரிழிவு நோயால் காலில் ஏற்பட்ட புண்கள் மிகவும் பிரச்சினையாக மாறி உள்ளது. எனவே உரிய சிகிச்சை மேற்கொள்ள பணம் இல்லாத காரணத்தால், இவருடைய நண்பர் ஒருவர் விஏ துரை குறித்து பேசி வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது நடிகர் சூர்யா, கருணாஸ், போன்ற பலர் தயாரிப்பாளர் துரைக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். மேலும் இயக்குனர் பாலா இவரிடம் இருந்து 25 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு திரும்ப தராத தகவலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பாலா இயக்கத்தில் துரை தயாரிப்பில் வெளியான 'பிதாமகன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் பாலாவை ஒரு படம் இயக்கி தர கூறியுள்ளார் துரை. இதற்கு முன் பணமாக 25 லட்ச ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார். ஆனால் பாலா படத்தை சொன்னபடி எடுத்து கொடுக்காமல், இழுத்துக் கொண்டே சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னிடம் வாங்கிய 25 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுக்கும்படி தன்னுடைய கஷ்ட காலத்தின் போது தயாரிப்பாளர் வி ஏ துரை கேட்டுள்ளார்.
ஆனால் பாலா அதை கொடுக்க மறுக்கவே துரை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தது மட்டுமின்றி, பாலாவின் அலுவலகத்திற்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தர்ணாவை கைவிட சொன்னதன் பேரில், அமைதியாக கைவிட்டார்.
சிகிச்சைக்கு பணமில்லாமல் பரிதாப நிலையில் 'பிதாமகன்' பட தயாரிப்பாளர்! ஓடி வந்து உதவிய நடிகர் சூர்யா!
தற்போது மிகுந்த பரிதாப நிலையில் உள்ள விஏ துரையின் நிலையை கருத்தில் கொண்டாவது, தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கி வரும் பாலா தயாரிப்பாளர் துரைக்கு சேர வேண்டிய 25 லட்ச ரூபாய் பணத்தை திரும்ப தர வேண்டும் என்றும், இல்லை என்றால் தயாரிப்பாளர் சங்கத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.