MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிகிச்சைக்கு பணமில்லாமல் பரிதாப நிலையில் 'பிதாமகன்' பட தயாரிப்பாளர்! ஓடி வந்து உதவிய நடிகர் சூர்யா!

சிகிச்சைக்கு பணமில்லாமல் பரிதாப நிலையில் 'பிதாமகன்' பட தயாரிப்பாளர்! ஓடி வந்து உதவிய நடிகர் சூர்யா!

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்த வி.ஏ.துரை தற்போது உடல் நலம் முடியாமல், மிகவும் மெலிந்து தங்க இடம் இல்லாமல், சிகிச்சைக்கு பணம் இல்லாமல்... தவித்து வருவதாக நேற்று வீடியோ வெளியிட்டு சிலர் தெரிவித்த நிலையில், நடிகர் சூர்யா முதல் ஆளாக வந்து உதவி செய்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 06 2023, 03:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பிரபல முன்னணி தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னத்திடம் அசோசியேட்டாக பணியாற்றிய வி.ஏ.துரை, பின்னர் எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி முன்னணி நடிகர்களான, விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்கள் மற்றும் சில தோல்வி படங்களையும் தயாரித்துள்ளார்.

26

'என்னமா கண்ணு', 'லூட்டி', 'பிதாமகன்', 'கஜேந்திரா', 'நாய்க்குட்டி' போன்ற படங்களை தயாரித்துள்ளார். ​​குறிப்பாக இவர் தயாரிப்பில், இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் - சூர்யா இணைந்து நடித்திருந்த 'பிதாமகன்' திரைப்படம் தேசிய விருதை பெற்றது.

செல்ல மகனுடன் நீச்சல் குளத்தில்.. குழந்தையாக மாறி ஆட்டம் போடும் காஜல் அகர்வால்..! வைரலாகும் வீடியோ..!

36

சில தோல்வி படங்களால், தன்னுடைய மொத்த சொத்தையும் இழந்து, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில், தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் சர்க்கரை நோய் காரணமாக இரண்டு கால்களும் புண்கள் ஏற்பட்ட பரிதாப நிலையில் இருந்த இவரை, இவரின் நண்பர் ஒருவர் தான் சாலிகிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்க வைத்துள்ளார்.
 

46

ஏற்கனவே இது குறித்து இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு தெரியப்படுத்திய நிலையில், அவரின்  உதவியால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி ஏ துரை, உடல் நிலை மோசமடைந்ததன் காரணமாக வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு ஓரளவு உடல் நலம் தேறிய பின்னர், சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Exclusive: டீ - ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸில்.. மும்பையில் உள்ள கஃபேவுக்கு ஹாய்யாக வந்த சூர்யா! Exclusive போட்டோஸ்!

56

தற்போது எழுந்து உட்காரு அளவுக்கு தேறியுள்ள இவரால்... நீரிழிவு நோயின் பாதிப்பின் காரணமாக கால் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு காலில் உள்ள சதை சிதைந்து, எலும்பு தெரியும் அளவிற்கு இருப்பதாகவும், எனவே இவரின் மேல் சிகிச்சைக்கு உதவி வேண்டும் என இவரின் நண்பர் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ வைரலாகியது.
 

66

Suriya பலருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வந்த தயாரிப்பாளர் வி.ஏ.துறைக்கு, பலர் உதவிக்கரம் நீட்ட முன் வந்த நிலையில், நடிகர் சூர்யா முதல் ஆளாக ஓடி வந்து அவரின் சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சட்டை பட்டனை அவிழ்த்து... காலரை தூக்கி விட்டு கிக் ஏற்றும் பிரியங்கா மோகன்! மாடர்ன் உடையில் மஜாவாக போஸ்..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏழையா சாவேனே தவிர, ஏழையா வாழ மாட்டேன்! குடும்பத்தின் கஞ்சத்தனத்தை வறுத்தெடுத்த டாப்ஸி!
Recommended image2
Rashmika Mehendi: தேவதை போல் ராஷ்மிகா.. மாஸ் காட்டும் விஜய்! வைரலாகும் மெஹந்தி பங்ஷன் போட்டோஸ் - ரசிகர்கள் குஷி!
Recommended image3
திரையில் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! விஜய் - த்ரிஷா விவகாரத்தில் பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் காட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved