சட்டை பட்டனை அவிழ்த்து... காலரை தூக்கி விட்டு கிக் ஏற்றும் பிரியங்கா மோகன்! மாடர்ன் உடையில் மஜாவாக போஸ்..!
நடிகை பிரியங்கா மோகன், பட வாய்ப்புக்காக நாளுக்கு நாள் கவர்ச்சியை ஏற்றிக்கொண்டே செல்லும் நிலையில், தற்போது காலரை தூக்கி விட்டு கிக் ஏற்றும் வகையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பெங்களூரை சேர்ந்த நடிகை பிரியங்கா மோகன், கன்னடத்தில் நடிகர் தண்டவ் ராம் ஹீரோவாக நடித்த. Ondh Kathe Hella எங்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தெலுங்கில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட பிரியங்கா மோகன் 'கேங்லீடர்' என்கிற படத்தில் நடித்தார். இப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி இவரை பிரபலமாகியது.
'கேங் லீடர்' திரைப்படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நிலையில், சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா நாமினேஷன் பட்டியலிலும் இடம்பெற செய்ததோடு... தமிழ் பட வாய்ப்பையும் கைப்பற்றி கொடுத்தது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த... 'டாக்டர்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமான பிரியங்கா மோகனுக்கு, இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததோடு மட்டும் இன்றி, சிறந்த நடிகைக்கான சைமா விருதையும் பெற்று தந்தது.
தொடர்ந்து பிரியங்காவுக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இப்படத்தை தொடர்ந்து... சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் சுமாரான விமர்சனங்களை பெற்ற நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த 'டான்' திரைப்படம் 100 கோடி வசூலை அள்ளியது.
அரசியல்வாதியின் மகளை இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகர் மஞ்சு மனோஜ்!
தற்போது இவரின் கைவசம் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வரும் கேப்டன் மில்லர், மற்றும் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
மேலும் பட வாய்ப்பை கைப்பற்றுவதற்காகவும், கவர்ச்சியான வேடங்களில் நடிக்க தயாராகி உள்ளதையும் தெரிவிக்கும் விதமாக, அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்... தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு, வெளியிட்டள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.