செல்ல மகனுடன் நீச்சல் குளத்தில்.. குழந்தையாக மாறி ஆட்டம் போடும் காஜல் அகர்வால்..! வைரலாகும் வீடியோ..!
நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய செல்ல மகன் நீல்லுடன் நீச்சல் குளத்தில் குழந்தை போல் விளையாடிய லேட்டஸ்ட் வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும், தன்னுடைய நடிப்பு திறமையாலும், அழகாலும் ரசிகர்களை கவனிக்க வைத்து வரும் காஜல் அகர்வால்... ஒருபக்கம் பிஸியாக படப்பிடிப்புகளில் நடித்து கொண்டிருந்தாலும், மற்றொருபுறம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் குழந்தையுடன் நேரத்தை சந்தோஷமாக கழித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது நடிகை காஜல் அகர்வால், தன்னுடைய செல்ல மகன் நீல் கிச்சுலுவுடன்... நீச்சல் குளத்தில் ஜாலியாக ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டத்தோடு விளையாடி மகிழ்ந்த வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட, அந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. செல்ல குட்டி நீலும் தண்ணீரை பார்த்த சந்தோஷத்தில் அம்மாவுடன் படு ஜோராக விளையாடுகிறார்.
தற்போது நடிகை காஜல் அகர்வால், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்.. உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும், 'இந்தியன் 2 ' படத்தில் நடித்து வருகிறார். ராம் சரண் நடிக்கும் RC 15 படத்தையும், இந்தியன் 2 படத்தையும் ஒரே நேரத்தில் ஷங்கர் இயக்கி வருவதால், ஒரு சிறு இடைவெளிக்கு பின்பு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதை சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவித்தது. இந்த படத்திற்காக குதிரை ஏற்றம் மற்றும், களரி பயிற்சி எடுத்து நடித்த காஜல் , 80 வயது பாட்டி வேடத்திலும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், இளமையான மற்றும் வயதான தோற்றம் என இரண்டிலும் நடித்துள்ளது உறுதியாகி உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் கருங்காப்பியம், கோஷ்டி, ஆகிய படங்களிலும் ஹிந்தியில் உமா என்கிற படத்திலும் நடித்து வருகிறார். அதே போல் அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ள, AK 62 ஆவது படத்திலும் காஜல் அகர்வாலை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. தற்போது வரை இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னுடைய மகனுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் காஜலின் வீடியோ இதோ...