MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இயக்குனர் நெல்சனுக்கு ஆச்சர்ய பரிசு கொடுத்து... இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெயிலர் பட நடிகர்! வைரலாகும் புகைப்படம்

இயக்குனர் நெல்சனுக்கு ஆச்சர்ய பரிசு கொடுத்து... இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெயிலர் பட நடிகர்! வைரலாகும் புகைப்படம்

இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு, 'ஜெயிலர்' படத்தில் நடித்து வரும், பிரபல நடிகர் ஆச்சரிய பரிசு ஒன்றை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை நெல்சன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 07 2023, 05:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தளபதி விஜய்யை வைத்து கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கி வருகிறார்.
 

25

 இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்,  பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரீஃப், நடிகர் சுனில், தமன்னா உள்ளிட்ட  பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ரஜினிகாந்துக்கு ஜோடியாக, படையப்பா படத்தில் நீலாம்பரியாக கலக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

சாதி மதம் தாண்டி... மனிதம் தான் முக்கியம் என்ற கருத்து வலியுறுத்தியுள்ளது அயோத்தி! நடிகர் சசிக்குமார் பேட்டி!
 

35

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இப்படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வரும் பிரபல நடிகர் நெல்சன் திலீப் குமாருக்கு ஆச்சரிய பரிசு ஒன்றை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

45

மிகவும் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றை பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப் நெல்சன் திலீப் குமாருக்கு  கொடுத்துள்ளார். இந்த தகவலை, ஜாக்கி ஷெரீப்புக்கு நன்றி தெரிவித்து, வண்டியில் அமர்ந்தபடி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Anikha: நீச்சல் குளம் பக்கத்தில் நின்று... நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அழகில் அசத்தல் போஸ் கொடுத்த அனிகா!
 

55

இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ஜெயிலர் படத்தை அண்ணாத்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என என கார்த்திருக்கின்றனர் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள்.  

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved