திருமணமான நடிகரை கமுக்கமாக காதலித்து விட்டு.. அவர் ஒரு பிளே பாய் என தெரிந்ததும் கழட்டி விட்ட நடிகை மீனா?
நடிகை மீனா பிரபல நடிகர் ஒருவரை காதலித்ததாக... 90-களில் கிசுகிசுக்கப்பட்ட விஷயம் தான் தற்போது மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது, நடிகை மீனாவை காதலித்த பிரபலம் யார்? எப்படி மீனா மயங்கினார் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'நெஞ்சங்கள்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ரஜினிகாந்த் நடித்த, எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த், 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, ஹிந்தி மலையாளம் போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர் பின்னர் ஹீரோயினாகவும் களமிறங்கினார்.
தெலுங்கில் 1990 ஆம் ஆண்டு 'நவயுகம்' என்கிற படத்தின் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்த மீனா, அதே ஆண்டு தமிழில் ஒரு புதிய கதை என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
சம்பள விஷயத்தில் நயன்தாராவை ஊதி தள்ளிய தீபிகா படுகோன்! தெலுங்கு படத்தில் நடிக்க இத்தனை கோடியா?
அழகு, அமைதி, திறமை என ஒரு சேர இருந்த நடிகை மீனாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. ரஜினி - கமல் போன்ற நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை தொடர்ந்து அவர்களுக்கே ஹீரோயினாகவும் நடிக்க துவங்கினார். குறிப்பாக ரஜினி - மீனா காம்பினேஷனில் வெளியான படங்கள் வசூலில் பட்டையை கிளப்பியது.
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மீனா, அதிகப்படியான சர்ச்சைகளில் சிக்காத பிரபலங்களில் ஒருவர். அதே போல் திரையுலகில் உள்ள அனைவருக்குமே மிகவும் மரியாதை கொடுப்பவர் என கேள்வி பட்டிருப்போம். இவரை திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் சில நடிகர்கள் இவருக்கு வலைவிரித்த போதிலும், யாரிடமும் சிக்காமல் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொண்டார்.
முதுகை முழுவதும் காட்டி.. வினோதமான சிகை அலங்காரத்துடன்! ஸ்ருதி ஹாசன் நடத்திய கிளாமர் போட்டோ ஷூட்!
ஆனால் இவர் ஒரு திருமணமான நடிகரை காதலித்து கழட்டி விட்டதாக 90-களில் தீயாக பரவிய கிசுகிசு மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. மீனா நடிகர் பிரபு தேவாவுடன் இணைந்து, டபுல்ஸ் என்கிற படத்தில் நடித்துள்ளார். அப்போது பிரபு தேவா பேசுவது, பழகுவது, அவரின் மேனரிஸத்தை பார்த்து மயங்கிய மீனா, பிரபு தேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரிந்தும் காதலிக்க துவங்கியுள்ளார்.
காதல் இருவருக்கும் இடையே முத்தி போவதற்கு முன்பாக... மீனாவின் தோழிகள் சிலர், அவர் ஒரு பிளே பாய் அனைத்து நடிகர்களுடனும் இப்படி தான் பேசி பழகுவார் என ஒரு பிட்டை போட, சுதாரித்துக்கொண்ட மீனா அவரை நைசாக கழட்டி விட்டதாக கூறப்படுகிறது.