தளபதிக்கு போட்டியாக ஹீரோவாக களமிறங்க தயாராகும் விஜய் மகன் சஞ்சய்..! இயக்குனர் யாருனு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
தளபதி விஜய்யை தொடர்ந்து, அவரின் மகன் சஞ்சய் படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... படிப்பை முடித்த கையேடு பிரபல இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் நடிகராக களமிறங்க உள்ளகாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்யின் மகன் சஞ்சய், தற்போது அமெரிக்காவில் சினிமா மேக்கிங் குறித்த படிப்பை படித்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய நண்பர்களுடன் ஷாட் பிலிம் எடுக்கும் இவரின் வீடியோ மற்றும் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாவது வழக்கமாக உள்ளது நாம் அறிந்ததே.
விஜய் நடிகராக இருந்தாலும், சஞ்சய் அவரின் தாத்தாவை போல்... திரைப்படம் இயக்குவார் என கூறப்பட்டது. இவ்வளவு ஏன், தன்னுடைய முதல் படத்தை அவரின் தந்தை விஜய்யை வைத்து இயக்க கூட வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியான நிலையில், சஞ்சய் படிப்பை முடித்து இந்தியா திரும்பிய பின்னர் ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
'லியோ' படப்பிடிப்பு தளத்தில் ஒரு கருப்பு ஆடு! லீக் காண காட்சியால் உச்சகட்ட அதிர்ச்சியில் படக்குழு!
இந்த படத்தை நடிகர் சூர்யாவை வைத்து 'சூரரைப் போற்று' படத்தை இயக்கி தேசிய விருது வென்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்க உள்ளாராம்.
இந்த படம் பிரபல எழுத்தாளர் நரனின் 'வேட்டை நாய்கள்' என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட உள்ள படம் என்றும், மிகவும் விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட இந்த நாவலில் இரு கதைகளை சுதா கொங்கரா வாங்கி வைத்திருப்பதாகவும், இதில் ஒரு கதையை தான் விஜய் மகன் சஞ்சய்யை வைத்து, அவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சஞ்சய் இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என்பதை மனதில் வைத்து, சுதா கொங்கரா... இந்த படம் குறித்து நேரடியாக விஜய்யிடம் பேசியதாகவும், விஜய் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும், அவர் விஜய்க்கு நட்பு ரீதியில் நன்கு தெரிந்தவர் என்பதால், சுதா கொங்கரா தன்னுடைய மகனுக்கு கொடுப்பதாக கூறிய வாய்ப்பை தட்டி கழிக்காமல் பதில் கூறியுள்ளார்.
சஞ்சய் இயக்குனர் ஆக வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார். அவரின் ஆசையில் எப்போதுமே நான் தடையாக இருந்தது இல்லை. எனவே சஞ்சய்யிடம் நீங்களே இந்த படத்தில் நடிக்கிறாரா என்பது குறித்து கேட்டு பாருங்கள், அவர் சம்மதம் கூறினால் எனக்கு எந்த ஆசோபனையும் இல்லை என தெரிவித்து விட்டாராம்.
பற்றி எரியும் வடக்கன் சர்ச்சை..! ட்விட்டரில் பளார் பதிலடி கொடுத்த விஜய் ஆண்டனி.. குவியும் பாராட்டு!
இதை தொடர்ந்து இந்த கதை குறித்து, விரைவில் சஞ்சய்யிடம் நேரிலோ அல்லது போன் மூலமாகவே சுதா கொங்கரா பேசுவார் என தெரிகிறது. ஒரு வேலை சஞ்சய் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் தளபதிக்கு போட்டியாகவே அவன் மகனும் களம் இறங்குவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.