பற்றி எரியும் வடக்கன் சர்ச்சை..! ட்விட்டரில் பளார் பதிலடி கொடுத்த விஜய் ஆண்டனி.. குவியும் பாராட்டு!
சமீபகாலமாக வடக்கில் இருந்து வரும் இந்தியர்கள், தமிழர்களை மட்டமாக நினைப்பதாக ஒரு கருத்து சமூக வலைத்தளத்தில் உலாவி வரும் நிலையில், இதற்க்கு விஜய் ஆண்டனி தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் பளார் பதிலடி கொடுத்துள்ளார்.
திரையுலகில் பன்முக திறமையோடு வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் விஜய் ஆண்டனி. தன்னால் முடியாது என எதுவும் இல்லை... என்கிற ஒன்றை மட்டுமே தாரக மந்திரமான மனதில் வைத்து கொண்டு, இசையமைப்பாளர், பட தொகுப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், மற்றும் தற்போது பிச்சைக்காரன் படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
இவரின் திறமைகள் மட்டும் அல்ல, அவ்வப்போது இவர் போடும் கருத்துக்களும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அதிக வட இந்தியாவை சேர்ந்தவர்கள் குடியேறிவிட்டதாகவும், தமிழர்களை அடிக்க துணிந்தவர்கள்... விரைவில் நம்மை அடிமை படுத்துவார்கள் என ஸ்டாண்ட் அப் காமெடியன் மதுரை முத்து முதல் பலர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி பதிவு போட்டிருந்தனர்.
பலர் வட இந்தியர்களுக்கு எதிராக தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்த நிலையில், இது போன்ற கருத்துக்களுக்கு பளார் பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது, விஜய் ஆண்டனியின் பதிவு.
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, "வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.