'லியோ' படப்பிடிப்பு தளத்தில் ஒரு கருப்பு ஆடு! லீக் காண காட்சியால் உச்சகட்ட அதிர்ச்சியில் படக்குழு!
தளபதி விஜய் தற்போது 'லியோ' படத்தில் நடித்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் விஜய் நடித்துக்கொண்டிருந்த காட்சி வெளியாகியுள்ளது, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் உச்சகட்ட அதிர்ச்சியில் உறவையவைத்துள்ளது.
நடிகர் விஜய் தன்னுடைய ஒவ்வொரு கதைகளையும், மிகவும் வித்தியாசமானதாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் 'வாரிசு' திரைப்படத்தில் ஸ்டைலிஷான தொழிலதிபராகவும், அம்மா மீது பாசம் வைத்துள்ள மகனாகவும், தன்னுடைய உருக்கமான நடிப்பால் ஸ்கோர் செய்திருந்தார் விஜய்.
இதுவரை இப்படம் 300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், ஒரு மாதத்தை கடந்து இன்னும் பல்வேறு திரையரங்குகளில் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கருப்பு நிற வேஷ்டி - சட்டையில் கையில் பாபா போட்டோவுடன் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்!
இது ஒருபுறம் இருக்க, 'வாரிசு' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக... இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தயாராகியுள்ளார் விஜய். கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், ப்ரியா ஆனந்த், உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில்.... படப்பிடிப்புத்தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் கூட வெளியாக கூடாது என, முழு பாதுகாப்புகளை இடையே 'லியோ' படப்பிடிப்பை நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
பற்றி எரியும் வடக்கன் சர்ச்சை..! ட்விட்டரில் பளார் பதிலடி கொடுத்த விஜய் ஆண்டனி.. குவியும் பாராட்டு!
குறிப்பாக படப்பிடிப்புத்தளத்தில் இருக்கும் யாருமே போன் போன்றவற்றை உபயோகிக்க கூட தடை போடப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், இது போன்ற கட்டுப்பாடுகளை மீறி, படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு கறுப்பாடு, ஷூட்டிங் ஸ்பாட் காட்சியை படம்பிடித்து அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
படக்குழு சற்றும் எதிர்பாராத இந்த சம்பவம் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற சம்பவம் அடுத்து நிகழாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு போடவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.