கருப்பு நிற வேஷ்டி - சட்டையில் கையில் பாபா போட்டோவுடன் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கருப்பு நிற வேஷ்டி சட்டை அணிந்து, எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து... இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் , ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் எங்கிற இடத்தில் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தானில் பிரத்தேயேக ஸ்டண்ட் காட்சி மற்றும் ஆக்ஷன் காட்சிகளை படக்குழு எடுத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படப்பிடிப்பு தலத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் படு வைரலானது.
சுமார் 70 சதவீத படப்பிடிப்பு காட்சிகள் முடிவடைந்துவிட்ட நிலையில்... இன்னும் ஓரிரு மாதத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளதாகவும், தீபாவளிக்கு இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு போட்டியாக கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' படமும் வெளியாகலாம் என சில தகவல்கள் கசிந்துள்ளது.
இந்நிலையில், நேற்று பாபா படத்தின் ரீரிலீஸ் வெற்றிபெற்றதை கொண்டாடும் விதமாக ரீ-ரிலீஸ் பணியில் ஈடுபட்ட படக்குழுவினரை சந்தித்து அவர்களுக்கு பாபா திருவுருவ படம் ஒன்றையும் பரிசாக வழங்கிய ரஜினிகாந்த்.
அடேங்கப்பா... பூ பட பார்வதியா இது? பாடி பில்டர் போல் கட்டுடல் அழகை காட்டி மிரள வைத்த போட்டோஸ் !
இந்த நிகழ்வின் போது கருப்பு நிற வேஷ்டி - சட்டையில் செம்ம ஸ்டைலிஷாக எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.