அடேங்கப்பா... பூ பட பார்வதியா இது? பாடி பில்டர் போல் கட்டுடல் அழகை காட்டி மிரள வைத்த போட்டோஸ் !
மலையாள நடிகையான பார்வதி தற்போது தன்னுடைய... உடல் அழகை வெளிக்காட்டும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படம், பார்பவர்களையே மிரள வைத்துள்ளது.
parvathy
அவுட் ஆப் சிலபஸ் என்கிற மலையாள படத்தின் மூலம், நடிகையாக தன்னுடைய திரையுலக வாழ்க்கையை துவங்கிய பார்வதி, திரையுலகில் அறிமுகமாகி 15 வருடங்கள் ஆன பின்னரும், இதுவரை 30க்கும் குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ளார் பார்வதி.
பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ள இவர்... சில படங்களில் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய மறுத்ததன் காரணமாகவே பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக தெரிவித்திருந்தார்.
பற்றி எரியும் வடக்கன் சர்ச்சை..! ட்விட்டரில் பளார் பதிலடி கொடுத்த விஜய் ஆண்டனி.. குவியும் பாராட்டு!
மலையாள திரையுலகம் மட்டும் இன்றி, தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் பார்வதி கடைசியாக நடித்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது.
தற்போது, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வரும் 'தங்கலான்' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவ்வப்போது இந்த படத்திற்காக மேக்கப் போடும் காட்சிகளையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த படம், தங்கம் எடுக்கும் தொழிலாளர்கள் பற்றி எடுக்கப்படும் படம் என்பதாலும்.... பல வருடங்களுக்கு முன்னர் நடிப்பது போல் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதால்... இந்த படத்திற்காக வீர பெண்மணியாக மாற பல பயிற்சிகளை செய்து தன்னுடைய உடலை ஃபிட்டாக மாற்றியுள்ளார்.
இதற்காக கடின உடல் பயிற்சிகளை செய்து வரும் பார்ப்பது, பாடி பில்டர் போல் போஸ் கொடுத்து பார்பவர்களையே அசர வைத்துள்ளார். இது குறித்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
பாகுபலி நடிகர் ராணா மீது பாய்ந்த கிரிமினல் வழக்கு! ரவுடிகளை ஏவி மிரட்டியதாக பரபரப்பு புகார்..!