Soori: 'என்கூட நடிக்க பல ஹீரோயின்ஸ் தயங்குனாங்க' நிராகரித்த நடிகைகள் பற்றி சூரி ஓபன் டாக்
Soori Rejected by Heroines : நடிகர் சூரி, தனது புதிய படமான 'மண்டாடி'யில் கதாநாயகியாக நடிக்க பல நடிகைகள் தயங்கியபோது, அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்ட நடிகை மஹிமா நம்பியாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Mandaadi Movie Hero Soori
நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் புதிய படம்தான் 'மண்டாடி'. கடலோரப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில், மலையாள நடிகை மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். செப்டம்பர் 10-ம் தேதி 'மண்டாடி' தியேட்டர்களில் வெளியாக உள்ள நிலையில், நடிகை மஹிமா நம்பியாரைப் பற்றி சூரி பேசியது கவனம் ஈர்த்துள்ளது. 'மண்டாடி' படத்தில் நடிக்க பல நடிகைகளிடம் கேட்டும், யாரும் நடிக்க முன்வரவில்லை என்று சூரி கூறியுள்ளார்.
நான் அடிபட்டு அடிபட்டு வாழ்க்கையில் ஜெயிச்சவன்: கண்கலங்கிய நடிகர் சூரி: வைரலாகும் எமோஷனல் ஸ்பீச்!
மஹிமாவுக்கு நன்றி சொன்ன சூரி
"இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க நிறைய பேரை அணுகினோம். ஆனால், பலரும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி நடிக்க மறுத்துட்டாங்க. ஒவ்வொருத்தருக்கும் அவங்கவங்க விருப்பம் இருக்கும். பலரும் வேண்டாம்னு சொன்ன ஒரு ரோலை, கதை முழுசா கேட்ட பிறகு, அந்த ரோலோட ஆழத்தைப் புரிஞ்சுகிட்டு மஹிமா ஓகே சொன்னாங்க. அவங்க கதையை மட்டும்தான் பார்த்தாங்க. வாழ்த்துகள் மஹி," என்று சூரி பேசினார். 'மண்டாடி' படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் சூரி இவ்வாறு குறிப்பிட்டார்.
சூரியின் உடன் பிறந்த இரட்டை சகோதரர் இவர் தானா? அண்ணன் சினிமாவில் கிங்; தம்பி பிசினஸில் கிங்!
மண்டாடி படக்குழு
இந்தப் படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் கேரள விநியோக உரிமையை கோகுலம் கோபாலனின் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் வாங்கியுள்ளது. தெலுங்கு நடிகர் சுஹாஸ் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். கடலோரப் பின்னணியில் ஒரு ஆக்ஷன் டிராமாவாக இந்தப் படம் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டின் 100 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைப் பகுதியில் நடக்கும் ஒரு தனித்துவமான விளையாட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
ஹீரோவாக மல்லுக்கட்டும் காமெடியன்கள்! சந்தானம், சூரி, யோகிபாபு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்
பாய்மரப் படகுப் போட்டியை பற்றிய படம்
அந்தப் பாய்மரப் படகுப் போட்டியில் பங்கேற்கும் ஒரு மீனவர் குழுவின் தலைவர்தான் 'மண்டாடி'. இந்தப் படம் சூரியை ஒரு மாஸ் ஹீரோவாகக் காட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சூரி மட்டுமின்றி, பிரபல நடிகர் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், மிதுன் ஜெய் சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன், ஸ்டன் சிவா, கிருத்திகா பாலசுப்ரமணியம் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தேசிய விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை பிரதீப் இ. ராகவ் கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிறது.
ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி; ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

