- Home
- Cinema
- நான் அடிபட்டு அடிபட்டு வாழ்க்கையில் ஜெயிச்சவன்: கண்கலங்கிய நடிகர் சூரி: வைரலாகும் எமோஷனல் ஸ்பீச்!
நான் அடிபட்டு அடிபட்டு வாழ்க்கையில் ஜெயிச்சவன்: கண்கலங்கிய நடிகர் சூரி: வைரலாகும் எமோஷனல் ஸ்பீச்!
Soori Emotional Speech About Life Struggle and Success Story : நான் அடிபட்டு அடிபட்டு ஜெயித்ததால் என்னிடம் தெளிவு இருக்கிறது ஆனால் சில பேர் ஆசைப்பட்டு ஜெய்பவர்களிடம் தெளிவு இருக்காது என்று நடிகர் சூரியக் கூறியுள்ளார்.

Parotta Soori Motivation Speech Tamil
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் சூரி. இந்தப் படத்தின் மூலமாக அவர் பரோட்டா சூரி என்றும் அழைக்கப்பட்டார். 50 புரோட்டா சாப்பிடும் டாஸ்கில் 50 புரோட்டாவையும் சாப்பிட்டு மறுபடியும் முதலில் இருந்து சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கும் காமெட் காட்சிகள் சூரிக்கு புதிய அடையாளத்தை கொடுத்தது. இந்தப் படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்தார். குறிப்பாக குள்ளநரி கூட்டம், வருத்தப்படாத வாலிபர் சங்க, ரஜினிமுருகன் என்று பல படங்கள் சூரிக்கு ஹிட் கொடுத்தது. காமெடி நடிகனாக வலம் வந்த சூரியை விடுதலை படம் மூலமாக ஹீரோவாக்கி அழகு பார்த்தவர் இயக்குநர் வெற்றிமாறன்.
Soori Life Struggle and Success Story
இன்று மாஸ் ஹீரோக்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். சிக்ஸ் பேக் உடம்பு, அதற்கேற்றார் போன்ற ஒரு தோற்றம் சூரியை அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்க வைத்தது. இந்த நிலையில் தான் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதாவது, மதுரையில் The Connect அமைப்பின் சார்பில் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் வேலை தேடும் இளைஞர்களைத் தொழில்முனைவோரக மாற்றும் நோக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் சூரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தனது வாழ்க்கை அனுபவங்களை உருக்கமாகப் தனது வாழ்க்கையை எப்படி உருவாக்கி இந்த நிலைமையில் இருக்கின்றேன் என்று கூறினார்.
மாணவர்கள் மத்தியில் பேசிய சூரி:
நடிகர் சூரி மாணவர்கள் மத்தியில் எனது பெயர் ராம் மற்றும் தம்பியின் பெயர் லட்சுமணன். நாங்கள் மதுரையில் உள்ள செனாய் பள்ளியில் தான் படித்தோம் நாங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன் ஆனால் அது நடக்கவில்லை நன்றாக படித்திருந்தால் நான் ஒரு மாவட்ட ஆட்சியராகவும் எனது தம்பி ஒரு பொறியாளராகவும் வர வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் எங்களால் முடியவில்லை. கஷ்டம் ஏற்பட்டதால் நான் எட்டாம் வகுப்புடன் என் பள்ளி பருவத்தை முடித்துக் கொண்டேன்.
Soori Emotional Speech Today
ஒரு கடையில் வேலை பார்த்தேன் அப்படியே என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று சினிமாவிற்கு வர வேண்டும் என்னுள் ஒரு ஆசை இருந்தது. காட்சிகள் மூலம் நான் தமிழ் சினிமாவிற்கு வந்தேன் ஆனால் நான் குள்ளநரி கூட்டம் வெண்ணிலா கபடி குழு போன்ற படத்தின் மூலமே நல்ல காமெடியானாக வெளி வந்தேன் அதன் பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது.
அவமானங்களை சந்தித்தேன்:
நான் தமிழ் சினிமாவிற்கு வர முன் தமிழ் சினிமாவிலும் பெரிய அவமானங்களுக்கு பிறகும் போராட்டங்களுக்குப் பிறகும் தான் நான் இந்த அளவில் இருக்கிறேன். சினிமாவிற்காக சென்னை வந்த போது என்னிடம் ஒரு இருபது ரூபாய் கூட சாப்பிட இருக்காது அதற்கு கூட நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று தனது கஷ்டத்தை மனம் உருகி கூறினார்.
அடிபட்டதால் வந்தது இந்த தெளிவு:
நான் அடிபட்டு வந்ததால் எனக்கு இவ்வளவு தெளிவு இருக்கிறது ஆசைப்பட்டு வந்தவர்களிடம் இந்த தெளிவு இருக்காது என்றும் சூரி உருக்கமாக கூறினார். எனக்கு சினிமாவின் வாய்ப்பு கிடைப்பதற்கு முன் சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டேன் அதனால் தற்போது மதுரையில் அம்மன் என்னும் ஹோட்டலை தெரிந்தது குறைந்த அளவில் உணவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறேன் இது எனது மிகவும் பெரிய கனவு நான் அதை தற்போது நிரூபித்து உள்ளேன் அந்த ஓட்டலில் பலரும் வந்து சாப்பிட்டு மிகவும் நன்றாக இருக்கிறது என்று என்னையும் மிகவும் பாராட்டுவார்கள் அது எனக்கு மிகவும் நிம்மதியாக இருக்கிறது என்றெல்லாம் சூரி தனது மகிழ்ச்சியை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். நீங்களும் நன்றாக சம்பாதிக்க வேண்டும். நன்றாக வாழ வேண்டும் குடும்பத்தை கைவிடாமல் வாழுங்கள் என்று கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.