ஹீரோவாக மல்லுக்கட்டும் காமெடியன்கள்! சந்தானம், சூரி, யோகிபாபு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்
காமெடி நடிகர்களான சூரி, சந்தானம், யோகிபாபு ஆகியோர் ஹீரோவாக நடித்த 3 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

Jora Kaiya Thattunga Clash with DD Next Level and Maaman movie : விவேக், வடிவேலுவுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களாக வலம் வந்தவர் என்றால் அது சூரி, சந்தானம் மற்றும் யோகிபாபு தான். இதில் சூரியும், சந்தானமும் முழு நேர ஹீரோவாகிவிட்டார்கள். இதனால் காமெடி வேடங்களில் அவர்கள் நடிப்பதில்லை. அதேபோல் யோகிபாபுவும் ஹீரோவாக அவ்வப்போது நடித்தாலும் தொடர்ந்து காமெடியனாகவும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர்கள் மூவரும் ஹீரோவாக நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
DD Next Level
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல்
சந்தானம் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற படம் டிடி ரிட்டர்ன்ஸ். இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டிடி நெக்ஸ்ட் லெவல். இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார். இப்படத்தில் சந்தானத்துடன் கெளதம் மேனன், கஸ்தூரி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகி உள்ள இப்படம் வருகிற மே மாதம் 16ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் மெர்சலான ‘கிஸா 47’ பாட்டு வந்தாச்சு
Maaman
சூரி நடித்த மாமன்
நகைச்சுவை நடிகர் சூரி, விடுதலை படத்தின் மூலம் ஹீரோவான பின்னர், அவருக்கு தொடர்ந்து ஹீரோவாக நடிக்க அதிக வாய்ப்புகள் வருகிறது. அந்த வகையில் கருடன், கொட்டுக்காளி போன்ற படங்களில் நாயகனாக நடித்து வெற்றி கண்ட சூரி, அடுத்ததாக மாமன் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் முருகேஷன் இயக்கி உள்ளார். இதில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படமும் வருகிற மே 16ந் தேதி தான் திரைக்கு வர உள்ளது.
Jora Kaiya Thattunga
யோகிபாபு ஹீரோவாக நடித்த ஜோரா கைய தட்டுங்க
சூரி, சந்தானம் படங்களுக்கு போட்டியாக வருகிற மே 16ந் தேதி யோகிபாபு ஹீரோவாக நடித்த ‘ஜோரா கைய தட்டுங்க’ திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை விநீஸ் மில்லினியம் இயக்கி உள்ளார். இப்படத்தில் மேஜிக் மேனாக யோகிபாபு நடித்துள்ளார். இப்படத்தை வாமா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக ஜாகிர் அலி தயாரித்துள்ளார். அருணகிரி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். சூரி, சந்தானம், யோகிபாபு ஹீரோவாக நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் ஹீரோவாக யார் ஜெயிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... மாமன் படத்தில் சூரிக்கு தங்கை – ஒரே ஒரு படத்தால சினிமா வாய்ப்பை தட்டி தூக்கிய லப்பர் பந்து நடிகை!