மாமன் படத்தில் சூரிக்கு தங்கை – ஒரே ஒரு படத்தால சினிமா வாய்ப்பை தட்டி தூக்கிய லப்பர் பந்து நடிகை!
Lubber Pandhu Actress Swasika Join With Soori in Maaman Movie : சூரி நடிப்பில் உருவாகி வரும் மாமன் படத்தில் அவருக்கு தங்கையாக லப்பர் பந்து நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Soori Filmography
Lubber Pandhu Actress Swasika Join With Soori in Maaman Movie : கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை சுவாசிகா. இவருடைய உண்மையான பெயர் பூஜா விஜய். ஆரம்பகாலங்களில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து அதன் பிறகு சினிமாவில் கால் பதித்துள்ளார். வாகை என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த சுவாசிகாவிற்கு கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, கண்டதும் காணாததும், அப்புச்சு கிராமம், பிரபா என்று பல படங்களில் நடித்திருந்தாலும் ஒரு படம் கூட அவரது கதாபாத்திரத்தை பேசவில்லை.
Lubber Pandhu Actress Swasika Join With Soori in Maaman Movie
அப்படியிருக்கும் போது தான் லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து தன்னுடைய படத்தில் சிறப்பான ஒரு ரோல் கொடுத்தார். லப்பர் பந்து படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்த சுவாசிகா இப்போது தமிழ் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து வருகிறார். அதோடு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
ஏற்கனவே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 45ஆவது படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க சுவாசிகா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்போது சூரி படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சினிமாவிற்குள் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே சூரி பல கஷ்டங்களை பட்டுள்ளார். சினிமாவில் அவர் பார்க்காத வேலையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பணியாற்றியிருக்கிறார். இவ்வளவு ஏன் படையப்பா படத்தில் கூட ஃபேன் பிடிக்கும் பாயாக வேலை பார்த்திருக்கிறார்.
Swasika Join With Soori in Maaman Movie
அதுமட்டுமின்றி 1998 ஆம் ஆண்டு காலகட்டங்களில் இருந்த 100 இயக்குநர்களில் கிட்டத்தட்ட 90க்கும் அதிகமான இயக்குநர்களிடம் பணியாற்றியிருக்கிறேன் என்று சூரியே கூறியிருக்கிறார். சூரியை ஹீரோவாக களத்தில் இறக்கிவிட்ட வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தின் 2ஆம் பாகம் இன்று வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சூரி நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை என்ற படம் உருவாகி வருகிறது. இதில் சூரி 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
Soori Upcoming Movies, Maaman Movie
இந்தப் படத்திற்கு பிறகு மற்றொரு படத்திலும் சூரி கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படத்திற்கான பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு போடப்பட்டது. படத்தோட டைட்டிலும் வெளியிடப்பட்டது. அப்படி என்ன படம் என்று பார்த்தால் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லெட்சுமி இருவரும் முன்னணி ரோலில் நடிக்கும் படம் தான் மாமன். முழுக்க முழுக்க கிராமத்து கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் லப்பர் பந்து நடிகை சுவாசிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதுவும் சூரிக்கு தங்கையாக நடிக்கிறாராம். சூரிக்கும், சுவாசிக்காவிற்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தோட கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.