- Home
- Cinema
- சூரியின் உடன் பிறந்த இரட்டை சகோதரர் இவர் தானா? அண்ணன் சினிமாவில் கிங்; தம்பி பிசினஸில் கிங்!
சூரியின் உடன் பிறந்த இரட்டை சகோதரர் இவர் தானா? அண்ணன் சினிமாவில் கிங்; தம்பி பிசினஸில் கிங்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக கலக்கி வரும் சூரி, தன்னுடன் பிறந்த இரட்டை சகோதரரான லட்சுமணனின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

Actor Soori Twin Brother
சூரி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அவருடைய பரோட்டா காமெடி தான். கவுண்டமணி - செந்திலுக்கு வாழைப்பழ காமெடி ஹிட்டானதைப் போல் பரோட்டா காமெடி மூலம் பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆனார் சூரி. அதனால் ரசிகர்களால் செல்லமாக பரோட்டா சூரி என அழைக்கப்பட்டு வருகிறார். வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடிக்கு பின்னர் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக சில ஆண்டுகள் கோலோச்சிய சூரிக்கு, தற்போது ஒரு படத்தில் கூட நகைச்சுவை வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் விடுதலை படம் தான்.
ஹீரோவாக கலக்கும் சூரி
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் சூரியை ஹீரோவாக உயர்த்தியது. அப்படத்தில் குமரேசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்று சொல்வதை விட வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பால் அப்படத்திற்கு உயிர்கொடுத்திருந்தார் சூரி. விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரிக்கு வரும் வாய்ப்புகள் எல்லாம் ஹீரோவாக நடிப்பதற்கு தான். அவரை காமெடியன் இமேஜில் இருந்து ஹீரோ இமேஜுக்கு உயர்த்திவிட்ட பெருமை இயக்குனர் வெற்றிமாறனையே சேரும். அவரின் பெயரை காப்பாற்றும் விதமாக தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் சூரி.
சூரியின் இரட்டை சகோதரர்
நடிகர் சூரி மதுரை அருகே உள்ள தன்னுடைய சொந்த கிராமத்தில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இவருடன் உடன் பிறந்த சகோதரர்கள் மொத்தம் 6 பேர். அதில் சூரியும், லட்சுமணனும் இரட்டைக் குழந்தைகள். சூரிக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. சூரியின் தன்னுடைய இரட்டை சகோதரரான லட்சுமணனை இதுவரை வெளியுலகத்துக்கு காட்டாமல் இருந்தார். சூரி சினிமாவில் கிங் என்றால் அவருடைய இரட்டை சகோதரர் லட்சுமணன் பிசினஸில் கிங். மதுரையில் சூரி நடத்தி வரும் அம்மன் உணவகங்களை லட்சுமணன் தான் நிர்வகித்து வருகிறாராம்.
சூரி தம்பி லட்சுமணன்
இந்த நிலையில், நேற்று பிறந்த நாள் கொண்டாடிய சூரி, தன்னுடைய இரட்டை சகோதரர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். இருவரும் இணைந்து தற்போது ஸ்வீட் பிசினஸிலும் இறங்கி இருக்கிறார்கள். அண்ணன் சினிமாவில் அடுத்தடுத்த உயரங்களை எட்டி வருவதைப் போல் அவரின் தம்பி லட்சுமணன், பிசினஸில் அடுத்தடுத்த லெவலுக்கு சென்று வருகிறார். இரட்டையர்களாக இருந்தாலும் இருவரும் ட்வின்ஸ் என்பது தெரியாத அளவுக்கு தான் இருவரின் தோற்றமும் உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

