சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு 'தி டர்ட்டி பிக்ச்சர்' - பார்ட் 2 படத்தில் நாயகியாகும் பிரபல தமிழ் பட நடிகை?
நடிகை சில்க் ஸ்மிதாவின் ஆரம்ப கால வாழ்க்கை பற்றிய திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது பாகம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நாயகியாக, பிரபல தமிழ் நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் வினுசக்ரவர்த்தியால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் சில்க் ஸ்மிதா. முதல் படத்தில் சிலுக்கு என்ற பெயரில் இவர் நடித்த நிலையில், நாளடைவில் இதுவே இவரது பெயரும், அடையாளமுமாக மாறியது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், திரையுலகில் அடியெடுத்து வைத்து 4 ஆண்டுகளிலேயே 200 படங்களில் நடித்தவர் என்கிற பெருமைக்கு உரியவர்.
மேலும் செய்திகள்ல்: மீண்டும் எப்போது? நயனுடன் கண்களால் காதல் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ஏக்கத்தை வெளிப்படுத்திய விக்கி!
சில்க் ஸ்மிதாவின் நடனம் தங்களுடைய படங்களில் இடம்பெற வேண்டும் என, முன்னணி நடிகர்கள் பலர் இவரது கால்ஷீட் கேட்டு காத்திருந்த காலங்களும் உண்டு. இவர் நடித்த படம் வெளியாகிறது என்றால், பலர் தங்களின் பட ரிலீஸ் தேதியை கூட மாற்றிவிடுவார்கள். காரணம் இவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டம்.
கவர்ச்சி வேடங்கள், மற்றும் கவர்ச்சி நடனம் ஆடுவதை தாண்டி... சில படங்களில் ஜனரஞ்சகமான நடிப்பதை வெளிப்படுத்தி, இப்படி பட்ட கதாபாத்திரத்திலும் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்தவர் இந்த கஞ்சா பூ கண் அழகி.
மேலும் செய்திகள்ல்: தவறான வார்த்தை தான்... 'கஞ்சா பூ கண்ணால' பாடல் வரிகளுக்கு மன்னிப்பு கேட்ட பாடலாசிரியர் மணிமாறன்..!
லைம் லைட்டில் இருக்கும் போதே... நடிகை சில்க் ஸ்மிதா திடீரென தற்கொலை செய்து கொண்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இவரது மறைவுக்கு கடன் பிரச்சனை, காதல் தோல்வி என பல காரணங்கள் கூறப்பட்டாலும், இதுவரை சரியான காரணங்கள் வெளியாகவில்லை.
இவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தியில் எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிச்சர்' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில்... பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார்.
மேலும் செய்திகள்ல்: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்... சிங்கிள் ப்ளீட் சேலை கட்டி அழகு தேவதையாக மாறிய சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்!
இதை தொடர்ந்து, தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக, சில மாதங்களாகவே தொடர்ந்து தகவல் வெளியான வண்ணம் உள்ளது. 'பான்' இந்தியா படமாக இந்த படத்தை படக்குழு எடுக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதற்க்கு பொருத்தமான நாயகியை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வந்ததாக கூறப்பட்டது.
இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் டாப்ஸி சிலிக் ஸ்மிதாவின், வாழ்க்கை வரலாறு படத்தின் இரண்டாம் பாகத்தில் சில்க் வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் செய்திகள்ல்: ஹீரோயினாக அறிமுகமாகிறாரா..? நடிகை ரோஜாவின் மகள்..! சீக்ரட்டாக நடக்கும் வேலைகள்!