ஹீரோயினாக அறிமுகமாகிறாரா..? நடிகை ரோஜாவின் மகள்..! சீக்ரட்டாக நடக்கும் வேலைகள்!
நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா, திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தற்போது டோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் காட்டு தீ போல் பரவி வருகிறது.
ஏற்கனவே நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகாவை நடிக்க வைக்க, சில டோலிவுட் இயக்குனர்கள் அணுகியதாக, கூறப்பட்ட நிலையில், தன்னுடைய மகளை நடிகையாக்க வைக்க ரோஜா - செல்வமணி ஆகியோர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் தற்போது, அமெரிக்காவில் உள்ள பிரபல திரைப்பட கல்லூரியில் நடிப்பு, இயக்கம், திரைக்கதை எழுதுதல், ஆகியவை பற்றி படித்து வருவதாகவும்... படிப்பை முடித்து இந்தியா திரும்பிய பின்னர் நடிப்பில் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: தனுஷ் பட நாயகி சோனம் கபூருக்கு குழந்தை பிறந்தாச்சு..! குவியும் வாழ்த்துக்கள்..!
நடிகை ரோஜா ஒரு நடிகை என்பதாலும், அவரது தந்தை செல்வமணி ஒரு இயக்குனர் என்பதாலும்... தன்னுடைய மகளுக்கு சீக்ரட்டாக ரோஜா நடிப்பு பயிற்சியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொடுத்து வருவதாகவும், அதே போல் அவரது தந்தை செல்வமணியும், திரைக்கதை எழுதுதல், மற்றும் படம் இயக்குவது குறித்து கற்பித்து வருகிறாராம்.
ஏற்கனவே அன்ஷுமாலிகா எழுதிய 'தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்', என்கிற புத்தகம் 'ஜி டவுன் என்ற இதழில் வெளியானது. இந்த புத்தகத்திற்காக சமீபத்தில் தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை இவர் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில் கிளாமர் டாலாக மாறிய திவ்ய பாரதி! அடங்காத கவர்ச்சி அட்ராசிட்டி!
படிப்பிலும் படு சுட்டியாக இருக்கும் அன்ஷுமாலிகா பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகினால் ... திறமையான நடிகையாக ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ரோஜா - செல்வமணி தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
மேலும் செய்திகள்: சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன்! ஐயோ... பாவம்... நடுராத்திரி மூணு மணிக்கு நடந்த விஷயத்தை கூறிய கார்த்தி!