தனுஷ் பட நாயகி சோனம் கபூருக்கு குழந்தை பிறந்தாச்சு..! குவியும் வாழ்த்துக்கள்..!
நடிகை சோனம் கபூருக்கு குழந்தை பிறந்துள்ள தகவல் வெளியானதை தொடர்ந்து, பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் தான் சோனம் கபூர். சோனம் கபூர் முன்னணி நடிகையாக இருந்த போதே, கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சில பாலிவுட் படங்களில் நடித்து வந்த சோனம் கபூர், கடந்த மார்ச் மாதம் தான் கர்ப்பமாக உள்ளதாக ரசிகர்களுக்கு கூறினார்.
இதைத்தொடர்ந்து கணவன் லண்டலில் வசித்து வந்த சோனம் கபூருக்கு, தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சோணம் கபூர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சோனம் கபூர் மற்றும் அவருடைய கணவர் ஆனந்த் அகுஜா தம்பதிக்கு, பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சோனம் கபூர் கடந்த 2007 ஆம் ஆண்டு, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 'சாவரியா' என்கிற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து பல முன்னணி பாலிவுட் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். குறிப்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடித்த முதல் பாலிவுட் திரைப்படமான 'ராஜன்னா' என்கிற படத்தில், இவர்தான் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் தமிழில் 'அம்பிகாபதி' என்னும் பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.