சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன்! ஐயோ... பாவம்... நடுராத்திரி மூணு மணிக்கு நடந்த விஷயத்தை கூறிய கார்த்தி!

நடுராத்திரி 3 மணிக்கு நடந்த நிகழ்வை கூறி... நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன் என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் கார்த்தி.
 

I will never forgive Sandy Master karthi share viruman movie experience

நடிகர் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில், சூர்யா தயாரிப்பில்.. இயக்குனர் முத்தையா இயக்கத்தில், கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'விருமன்'. ஒரு வாரத்தை கடந்தும், தொடர்ந்து சிறந்த விமர்சனங்களுடன் வசூல் சாதனை செய்து வருகிறது 'விருமன்' திரைப்படம். யுவன் ஷங்கர் ராஜா இசையில், வெளியான அனைத்து பாடல்களும் தொடர்ந்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. 

I will never forgive Sandy Master karthi share viruman movie experience

மேலும் செய்திகள்: பிக்பாஸ் பாலாஜி முருகதாஸுடன் நெருக்கம் காட்டும் ஜூலி... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
 

இந்த படம் இதுவரை ரூ.35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், 400க்கும் அதிகமான திரையரங்குகளில் இரண்டாவது வாரமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை குடும்பமாக பார்த்து ரசிக்க கூடிய படம் என  அனைவரும் இந்த படத்தை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். அதே போல், இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி... முதல் படத்திலேயே நடிப்பு , ஆட்டம், பாட்டம் என அனைத்திலும் பட்டையை கிளப்பியுள்ளார்.

I will never forgive Sandy Master karthi share viruman movie experience

மேலும் செய்திகள்: கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளோடு... தன்னுடைய 4 மாத மகனின் புகைப்படத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்.!
 

இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் சாண்டி மாஸ்டரை மன்னிக்க மாட்டேன் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது,  நடுராத்திரி மூன்று மணிக்கெல்லாம் சாண்டி மாஸ்டர் என்னை சம்மர் சால்ட் அடிக்க வைத்தாயே, உன்னை மன்னிக்கவே மாட்டேன். ஆனால் இதற்கு முன் இந்த மாதிரி சாகசங்கள் நான் செய்ததே இல்லை, இனி எல்லா ஊர் திருவிழாவிலும் நம்ம பாட்டு மட்டும்தான் கண்டிப்பாக இருக்கும், யுவனின் வெறித்தனம்’ என்று பதிவு செய்துள்ளார். 'விருமன் படத்தில் இடம்பெறும் ’வானம் கிடுகிடுங்க’ பாடலில் நடன காட்சி படமாக்கப்பட்டபோது கார்த்தியை சாண்டி சம்மர் சால்ட் அடிக்க வைத்ததை குறிப்பிட்டு தான் இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios