MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக்பாஸ் பாலாஜி முருகதாஸுடன் நெருக்கம் காட்டும் ஜூலி... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிக்பாஸ் பாலாஜி முருகதாஸுடன் நெருக்கம் காட்டும் ஜூலி... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிக்பாஸ் ஜூலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, பிக்பாஸ் பாலாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 20 2022, 03:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ஜல்லிக்கட்டு போராட்டத்தின், மூலம் அறியப்பட்ட ஜூலி... இதையே ஒரு அடையாமளாக வைத்து கொண்டு, நடிகர்  கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின்  முதல் சீசனின் போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே சென்றார்.

28

பிக்பாஸ் நிகழ்ச்சியின் உள்ளே சென்ற போது, இவருக்கு மக்கள் பலர்... வாழ்த்து கூறி உள்ளே அனுப்பினர். பிக்பாஸ் வீட்டில் இவர் நடந்து கொண்ட விதம், பல விஷயங்களில் அப்பட்டமாக பொய் சொல்லி சிக்கியது, இவரது முகத்திரையை கிழித்தது. இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வெளியேறினார். வெளியே வந்ததும், சினிமாவில் நடிக்க மாட்டேன்... தெய்வமாக நினைக்கும் நர்ஸ் தொழிலை தான் செய்வேன் என கலர் கலராக ரீல் விட்ட ஜூலி. தற்போது நர்ஸ் என்கிற அடையாளத்தை ஓரம் கட்டி வைத்து விட்டு, திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்: கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளோடு... தன்னுடைய 4 மாத மகனின் புகைப்படத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்.!
 

38

ஆனால் என்ன நேரமோ... இவர் நாயகியாக நடித்த ஒரு படம் கூட இன்னும் வெளியாகவில்லை. குணச்சித்திர வேடத்தில் நடித்த படங்கள் மட்டுமே வெளியானது. மேலும் தற்போது மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

48

சமீபத்தில் கூட சில காதல் சர்ச்சைகளில் சிக்கினார் ஜூலி. தன்னை காதலித்து ஏமாற்றி தன்னுடைய பொருட்களையெல்லாம் ஒருவர் அனுபவித்து வருவதாக ஜூலி புகார் கொடுத்த நிலையில், போலீசார் விசாரணையில் உண்மை மறைத்து ஜூலி புகார் கொடுத்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்: காதுகளை பாதுகாப்பாக வைத்துகொள்ளுகள்.. நிபந்தனையற்ற அன்புடன் அஜித் கூறிய தகவல்! வைரலாகும் சுரேஷ் சந்திரா ட்விட்
 

58

ஜூலியை தன்னை காதலித்து கொண்டே... இன்னொருவருடன் பழகியது தான் பிரச்சனைக்கு காரணம் என்றும், அவர் கொடுத்த பொருட்களை திரும்பி ஒப்படைப்பதாக அந்த நபர் கூறியதை தொடர்ந்து, பொய் புகார் கூறிய ஜூலியை போலீசார் கண்டித்து அனுப்பியதாகவும் செய்திகள் வெளியானது.

68

இதை தொடர்ந்து, சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார் ஜூலி. அப்போது இவர் என்ன தான் கவனமாக விளையாடினாலும், நிரூப் இவரை கேவலமாக திட்டி அசிங்கப்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது. 

மேலும் செய்திகள்: தலைவர் கொடுத்த முகூர்த்த புடவை... விஜய் வீட்டில் முதல் விருந்து..! திருமணம் குறித்து பகிர்ந்த ஆர்த்தி - கணேஷ்
 

78

தற்போது மீண்டும் தன்னுடைய அன்றாட பணிகளில் கவனம் செலுத்தி வரும் ஜூலி, அவ்வப்போது நைட் பார்ட்டியில் கலந்து கொள்வது, மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், பிக்பாஸ் பாலாவுடன் இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்  நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

88

கலிடாஸ் வென்ச்சர்ஸ் மற்றும் ஐகே கிரியேஷன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்ட சிவகாமி எஸ்டேட் மற்றும் ராயல் கிரவுன் ரிசார்ட் வழங்கும் மாநில அளவிலான வாலி பால் போட்டி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தான் ஜூலி, பாலா, மற்றும் இன்னும் சில பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது ஜூலி பாலாவுடன் நட்பு ரீதியாக எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
திருடன் எங்கே.. சிக்குவானா சேது? - பணத்திருட்டு விவகாரத்தில் அன்புவின் அதிரடி முடிவு!
Recommended image2
விவாகரத்து டூ விஸ்வரூபம்! சமந்தாவின் 'பீனிக்ஸ்' பயணம்: கன்னட ஸ்டார் துருவா சர்ஜாவுக்கே சவால் விடுவது இதுவா?
Recommended image3
ஷங்கரின் April Fool சம்பவம்... அப்போ அது அமெரிக்கா இல்லையா? உடைந்த ஜீன்ஸ் பட ரகசியம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved