கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளோடு... தன்னுடைய 4 மாத மகனின் புகைப்படத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்.!
இந்த ஆண்டு நடிகை காஜல் அகர்வால் கிருஷ்ண ஜெயந்தியை தன்னுடைய செல்ல மகனுடன் கொண்டாடியுள்ளார். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளோடு இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டு நடிகை காஜல் அகர்வால் கிருஷ்ண ஜெயந்தியை தன்னுடைய செல்ல மகனுடன் கொண்டாடியுள்ளார். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளோடு இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
காஜல் அகர்வால் விரைவில் துவங்க உள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது தன்னுடைய 4 மாத குழந்தையை கவனித்து கொள்வதில் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். மேலும் உடல் பயிற்சிகள் மூலம் தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
மேலும் செய்திகள்: பார்த்தாலே கிக் ஏறுது... ஸ்ட்ராப் லெஸ் கவுனில் கிளாமர் குயினாக மாறிய மிருணாளினி! லேட்டஸ்ட் போட்டோஸ்!
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் காஜல் அவ்வப்போது தன்னுடைய கணவர், குழந்தை, மற்றும் குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், நேற்று உலகம் முழுவதும் இந்து மக்களால் கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜெயந்தியை இந்த வருடம் தன்னுடைய மகனுடன் கொண்டாடியுள்ளார் காஜல்.
காஜல் அகர்வால் மகன் பிறந்து நேற்றுடன் 4 மாதம் ஆகும் நிலையில், அதனை குறிப்பிட்டு தன்னுடைய மகன் நீல் கிச்சுலுவை கொஞ்சியதை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: காதுகளை பாதுகாப்பாக வைத்துகொள்ளுகள்.. நிபந்தனையற்ற அன்புடன் அஜித் கூறிய தகவல்! வைரலாகும் சுரேஷ் சந்திரா ட்விட்
சமீபத்தில் கூட காஜல் அகர்வால் கடப்பாவாக மாறி, அவரது மகன் பாகுபலி போல் காஜல் தலையில் கால் வைத்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட அது வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
காஜல் அகர்வால் தனது மகன் நீலைப் பெற்றெடுத்த பின்னர், தனது மகிழ்ச்சி மற்றும் தாயான தருணத்தைத் பற்றி இதயத்தை உருக்கும் வகையில் சில பதிவுகளை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தான் தற்போது, கிருஷ்ண ஜெயந்தி புகைப்படத்தையும் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: ரோட்டில் நின்று கொண்டே... குட்டை டவுசரில் விக்கியூடன் கண்டமேனிக்கு ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா! ஹாட் போட்டோஸ்!