MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்னை காலி செய்ய வேலை நடக்குது... புது குண்டை தூக்கிப்போட்ட நடிகை பிரியங்கா மோகன்

என்னை காலி செய்ய வேலை நடக்குது... புது குண்டை தூக்கிப்போட்ட நடிகை பிரியங்கா மோகன்

சினிமாவில் தனக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் நடந்ததாக நடிகை பிரியங்கா மோகன் வெளிப்படையாகக் கூறியுள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 09 2026, 01:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Priyanka Mohan Says she Facing Hate Campaigns
Image Credit : Instagram/ Priyanka Mohan

Priyanka Mohan Says she Facing Hate Campaigns

டான், கேப்டன் மில்லர் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். தற்போது, தனது திரையுலக வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தனக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் நடந்ததாக பிரியங்கா மோகன் வெளிப்படையாகக் கூறியுள்ளார். அந்த கடந்த காலத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றும், அது ஒரு வகையில் தன்னை ஒரு நல்ல மனிதராக மாற்ற உதவியது என்றும் பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.

24
பிரியங்கா மோகன் ஆதங்கம்
Image Credit : X

பிரியங்கா மோகன் ஆதங்கம்

இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரியங்கா மோகன் கூறியதாவது : "எனக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் நடந்துள்ளது. இன்று எல்லோரும் எல்லோரையும் ட்ரோல் செய்கிறார்கள். பழம்பெரும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உட்பட இன்று ட்ரோல் செய்யப்படுகிறார்கள். என் விஷயத்திலும் அப்படி பல விஷயங்கள் நடந்தன. ஆனால் அந்த கடந்த காலத்திற்கு நான் திரும்பிச் செல்ல விரும்பவில்லை," என கூறி உள்ளார் பிரியங்கா மோகன்.

Related Articles

Related image1
Priyanka Mohan தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோயின் – பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
Related image2
அய்யோ பாவம்... பிரியங்கா மோகனை நசுக்கி தள்ளிய கூட்டம்! விஜய்யை வெச்சு செய்த நெட்டிசன்கள்!
34
நல்ல மனிதராக மாற்ற உதவியது
Image Credit : instagram

நல்ல மனிதராக மாற்ற உதவியது

தொடர்ந்து பேசிய அவர் "ஏனென்றால் அது ஒரு வகையில் என்னை ஒரு நல்ல மனிதராக மாற்ற உதவியது, அதிலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். சினிமா துறை நிறைய நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த ஒரு தளம். இங்கே யாருக்கும் எதுவும் நடக்கலாம். ஆனால் ஒரு கடினமான கட்டம் வரும்போது, அது நம்மை மேலும் உயர உதவும்," என்று பிரியங்கா மோகன் மேலும் கூறினார். சுதீர் சீனிவாசனுடனான ஒரு நேர்காணலின் போது பிரியங்கா இவ்வாறு பதிலளித்தார்.

44
பிரியங்கா மோகன் கைவசம் உள்ள படங்கள்
Image Credit : instagram

பிரியங்கா மோகன் கைவசம் உள்ள படங்கள்

நடிகை பிரியங்கா மோகன் தற்போது தெலுங்கில் பிசியாக உள்ளார். கடைசியாக பவன் கல்யாண் ஜோடியாக ஓஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரதர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து கவினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் பிரியங்கா மோகன். அப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்திலும் பிரியங்கா மோகன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இப்படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
தமிழ் நடிகைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை வாரியம் கொடுத்த பேரிடி... ரிலீஸுக்கு வந்த புது சிக்கல்..!
Recommended image2
கள்ள உறவில் சரவணன்; மீனாவிடம் கதறி அழுத மயில்... கதிரிடம் திட்டுவாங்கிய ராஜி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
Recommended image3
ஒரே மேடையில் ஐஸ்வர்யா ராய் - நீட்டா அம்பானி ஆட்டம்.! சல்மான் கான் பாட்டிற்கு செம டான்ஸ்!
Related Stories
Recommended image1
Priyanka Mohan தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோயின் – பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
Recommended image2
அய்யோ பாவம்... பிரியங்கா மோகனை நசுக்கி தள்ளிய கூட்டம்! விஜய்யை வெச்சு செய்த நெட்டிசன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved