- Home
- Cinema
- Priyanka Mohan தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோயின் – பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
Priyanka Mohan தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோயின் – பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
Priyanka Mohan Networth in Tamil : தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரக் கூடிய சூப்பர் ஹீரோயினான பிரியங்கா மோகனின் நிகர சொத்து மதிப்பு எத்தனை கோடி என்பது பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

பிரியங்கா மோகன் சொத்து மதிப்பு, கார் கலெக்ஷன்
Priyanka Mohan Networth in Tamil : கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். கடந்த 1994 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி பிறந்துள்ளார். மூதபித்ரியில் பள்ளி படிப்பை முடித்த பிரியங்கா மோகன் உயிரியல் பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது அவர் சென்னையில் வசித்து வருகிறார்.
பிரியங்கா மோகன் சினிமா வாழ்க்கை
கடந்த 2019ஆம் ஆண்டு திரைக்கு வந்த Ondh Kathe Hella என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில் அவரது அமைதியான முக பாவணை, அழகான தோற்றம் ஆகியவற்றின் காரணமாக தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.
பிரியங்கா மோகன் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
கடந்த 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடமிருந்து பாசிட்டிவான விமர்சனங்களை சந்திக்கவே அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றார். இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் கொடுத்தது. மேலும், இந்தப் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்காக சைமா விருதும் அவர் வென்றார்.
பிரியங்கா மோகன் வாங்கும் சம்பளம்
டாக்டர் படத்திற்கு பிறகு 2ஆவது தமிழ் படத்திலும் நடித்தார். சூர்யா நடிப்பில் திரைக்கு வந்த எதற்கும் துணிந்தவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் அன்பைப் பெற்ற பிரியங்கா மோகன் எந்த காட்சியாக இருந்தாலும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்து ஸ்கோர் செய்துவிடுகிறார். டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு டான் படத்தில் நடித்தார்.
நடிகை பிரியங்கா மோகன் நடித்த படங்களின் பட்டியல்
அதன் பிறகு கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். இந்த படம் பெரிதாக பேசப்படாத நிலையில் அடுத்ததாக ரவி மோகன் உடன் இணைந்து பிரதர் படத்தில் நடித்தார். இந்தப் படமும் அமரன் படத்தில் வசூல் மற்றும் விமர்சனத்தால் வந்த வேகத்தில் நடையை கட்ட தொடங்கியது. தற்போது ஓஜி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் மீண்டும் தமிழ் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார்.
கவினுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகன்
அப்படி அவர் கவனம் செலுத்திய புதிய படம் கவின் நடிப்பில் உருவாகும் கவின்09 படம் தான். திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார். கனா காணும் காலங்கள் சீரியலை இயக்கிய இயக்குநர் கென் ராய்ஸன் தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.
பிரியங்கா மோகன் சொத்து மதிப்பு
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு படத்திற்கு ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அவரது நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.8 கொடி முதல் ரூ.10 கோடி வரையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சினிமா, விளம்பரங்கள் மற்றும் மாடலிங் ஆகியவற்றின் மூலமாகத்தான் பிரியங்கா அருள் மோகன் வருமானம் பெற்று வருகிறார்.
பிரியங்கா மோகன் கார் கலெக்ஷன்
இவரிடம் ரூ.45 லட்சம் மதிப்புள்ள ஆடி க்யூ 3 கார் ஒன்றும், ரூ.28 லட்சம் மதிப்பு கொண்ட டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார் ஒன்றும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.