அய்யோ பாவம்... பிரியங்கா மோகனை நசுக்கி தள்ளிய கூட்டம்! விஜய்யை வெச்சு செய்த நெட்டிசன்கள்!
நடிகை பிரியங்கா மோகன் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கிய இவரை ரசிகர்கள் நசுக்கி தள்ளிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னடத்தில் அறிமுகம்:
நடிகை பிரியங்கா மோகன் சென்னையை சேர்ந்தவர் என்றாலும், இவர் அறிமுகமானது கன்னட மொழி திரைப்படம் மூலமாக தான். 2019-ஆம் ஆண்டு வெளியான 'ஒந் கதே ஹெல்ல' என்கிற படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார். இதை தொடர்ந்து, நானிக்கு ஜோடியா தெலுங்கில் இவர் நடித்த 'நானிஸ் கேங் லீடர்' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
தமிழுக்கு கொண்டு வந்த நெல்சன் திலீப் குமார்:
அடுத்தடுத்து கன்னடம், மற்றும் தெலுங்கில் பிசியாக நடிக்க துவங்கிய பிரியங்காவை தமிழுக்கு கொண்டுவந்தவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். 2021-ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து இவர் இயக்கிய 'டாக்டர்' படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்தார். முதல் படத்திலேயே தன்னுடைய எதார்த்தமான நடிப்பு மற்றும் நளினமான நடன அசைவுகள் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தனர்.
100 கோடி வசூல்:
'டாக்டர்' படத்தின் வெற்றி, தமிழில் பிரியங்கா மோகனுக்கு மிகப்பெரிய ஓப்பனிங்காக அமைந்தது. 'டாக்டர்' படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, டான் படத்தில் நடித்தார். இந்த திரைப்படமும் சுமார் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்தது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்களின் உத்தேச பட்டியல் – ஓ இதுல இவங்க எல்லாம் இருக்காங்களா?
வரிசையாக தோல்வி படங்கள்:
இதை தொடர்ந்து, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பபை பெற்றார். இந்த படம் மோசமான தோல்வியை சந்தித்தது. பின்னர் தனுசுக்கு ஜோடியாக நடித்த கேப்டன் மில்லர், ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்த பிரதர் போன்ற படங்களும் பிரியங்காவும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க தவறிவிட்டது.
OG மெகா ஹிட்:
ஆனால் தெலுங்கில் கடந்த வாரம், பவன் கல்யாணுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்து வெளியான OG திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இவரின் கைவசம் தமிழில் கவினின் 9-ஆவது படமாக உருவாகி வரும் படம் மட்டுமே உள்ளது. இதை தவிர வெப் தொடர் ஒன்றிலும் இவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடை திறப்பு விழாவில் காசு பார்க்கும் பிரியங்கா:
படப்பிடிப்பு இல்லாத நாட்களில், நடிகைகள் சிலர் கடை திறப்பு விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம், வெயிட்டாக காசு பார்க்கிறார்கள். அந்த வகையில் பிரியங்கா மோகன் பல கடைதிறப்பு விழாக்களில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் தான் பிரியங்கா மோகன் ஹைதராபாத்தில் உள்ள ஒரு கடைதிறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பாதுகாப்புடன் வந்த போதும் ரசிகர்கள் இவர் சூழ்ந்து கொண்டதால் இவர் கூட்ட நெரிசலில் சிக்க, இவரை ரசிகர்களும் நசுக்கி தள்ளிவிட்டனர்.
சனாதன தர்மத்தை சிம்பிளா காட்டுற தலைவா! ரஜினியை புகழுந்து தள்ளும் பாஜக!
விஜய்யை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்:
இந்த சம்பவத்தை நெட்டிசன்கள் சிலர் கரூர் சம்பவத்துடன் இணைத்து பேசி வருகிறார்கள். அதாவது, 200 பேர் 300 பேர் சூழ்ந்திருக்கும் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள, பாதுகாப்புடன் வந்தவருக்கே... இந்த நிலை என்றால், எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் 40,000 பேர் கரூரில் கூடினார்கள். அவர்கள் அங்கு நிற்க கூட இடம் இல்லாமல் எவ்வளவு துயரத்தை அனுபவித்திருப்பார்கள் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு... இனி இது போல் விஜய் தன்னுடைய சுய லாபத்துக்காக மற்றவர்கள் உயிரை பணயம் வைக்க கூடாது என சாடி வருகிறார்கள்.