MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பிக்பாஸ் பெட்ரூமுக்குள்ள பாத் டப் – பாத்து ஷாக்கான விஜய் சேதுபதி – இன்னும் என்னென்ன வசதி இருக்கு தெரியுமா?

பிக்பாஸ் பெட்ரூமுக்குள்ள பாத் டப் – பாத்து ஷாக்கான விஜய் சேதுபதி – இன்னும் என்னென்ன வசதி இருக்கு தெரியுமா?

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியானது இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் நிலையில் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

3 Min read
Author : Rsiva kumar
| Updated : Oct 05 2025, 03:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பிக் பாஸ் தமிழ் சீசன் 9
Image Credit : Bigg Boss Tamil Season 9 Army Facebook

பிக் பாஸ் தமிழ் சீசன் 9

ஒட்டு மொத்த ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அந்த ஒரு தருணம் இன்று மாலை 6 மணிக்கு தொடங்க இருக்கிறது. ஆம், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இதில் எத்தனை போட்டியாளர்கள் இடம் பெறுவார்கள், யார் யார் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு ரசிகளிடமும் இருக்கிறது. கிட்டத்தட்ட இவர்கள் தான் செல்வார்கள் என்ற ஒரு யூகத்திற்கு அனைவருமே வந்துவிட்டோம்.

புதிய உயரங்களை தொடுவதற்கான தொடக்க நாள்..😎

பாக்க பாக்க தான் புரியும்.. போக போக தான் தெரியும். Bigg Boss Tamil Season 9 | Grand Launch - இன்று மாலை 6 மணிக்கு ..😎 #BiggBossSeasonTamil9 #OnnumePuriyala #BiggBoss9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/wqeCPm4nZ7

— Vijay Television (@vijaytelevision) October 5, 2025

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9
Image Credit : Bigg Boss Tamil Season 9 Army Facebook

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9

இந்த சூழலில் தான் ஒவ்வொரு வருடமும் புதுப்புது வசதிகளுடன் பிக்பாஸ் தமிழ் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பிக்பாக்ஸ் 9ஆவது சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான புரோமோ வீடியோ ஏற்கனவே வெளியானது. அதில், பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற விஜய் சேதுபதி உடன் வந்தவரிடம் இது என்ன சார் என்று கேட்கிறார். அதற்கு அவரோ ஜக்குசி என்கிறார். அப்படி என்றால் பாத் டப்.

ஆரம்பிக்கலாமா.. 😎 பாக்க பாக்க தான் புரியும்.. போக போக தான் தெரியும். Bigg Boss Tamil Season 9 | Grand Launch - இன்று மாலை 6 மணிக்கு ..😎 #BiggBossSeasonTamil9 #OnnumePuriyala #BiggBoss9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/XA2Fm3xTni

— Vijay Television (@vijaytelevision) October 5, 2025

36
விஜய் சேதுபதி
Image Credit : Bigg Boss Tamil Season 9 Army Facebook

விஜய் சேதுபதி

பெட்ரூமுக்குள்ளாகவே பாத் டப் வைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது கண்டெண்ட்டுக்கு கணக்கே இருக்காது என்று தெரிகிறது. மேலும், பார்க்க சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு ஏன், பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னதாக இருபுறம் குதிரை போன்ற உருவம் இருக்கிறது. மேலும், வீட்டிற்குள் கிச்சன் செட்டப்பில் வித்தியாசம் இருக்கிறது. Confession ரூமில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நீ கல்யாணம் பண்ணு... நாங்க டைவர்ஸ் பண்றோம்..! குணசேகரனை தில்லாக எதிர்க்கும் சிங்கப்பெண்கள் - எதிர்நீச்சல் 2

46
பாக்க பாக்க புரியும் போக போக தெரியும்
Image Credit : Bigg Boss Tamil Season 9 Army Facebook

பாக்க பாக்க புரியும் போக போக தெரியும்

உட்கார்ந்தால் பார்ப்பவர்களுக்கு பறவை போன்ற ஒரு தோற்றம் வரும். பிக்பாஸ் கஃபே ஏரியாவிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தனியாக கார்டன் ஏரியாவில் ஷோபா போட்டு லைட் செட்டப் உடன் தென்னை மரம் போன்ற செட்டப் பார்க்கவே அழகாக இருக்கிறது. இப்படி நிறைய மாற்றங்களுடன் இந்த 9ஆவது சீசனுக்கான பிக் பாஸ் பிரம்மாண்டமாக இன்று மாலை தொடங்குகிறது.

கோலாகல துவக்கம் Bigg Boss Tamil Season 9 😎 

பாக்க பாக்க தான் புரியும்.. போக போக தான் தெரியும். Bigg Boss Tamil Season 9 | Grand Launch - இன்று மாலை 6 மணிக்கு ..😎 #BiggBossSeasonTamil9 #OnnumePuriyala #BiggBoss9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/kMAnivIEYL

— Vijay Television (@vijaytelevision) October 5, 2025

56
பிக் பாஸ் தமிழ் சீசன் 9
Image Credit : Bigg Boss Tamil Season 9 Army Facebook

பிக் பாஸ் தமிழ் சீசன் 9

கடந்த 8ஆவது சீசனை முதல் முறையாக தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி மீது விமர்சனம் எழுந்த நிலையில் அதனை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தார். இப்போது 2ஆவது முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் கரூர் சம்பவம் குறித்து விஜய் சேதுபதி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை இருந்ததை விட இந்த முறை முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. பிக் பாஸ் ஒவ்வொரு முறையும் வித்தியாசமாகவும், மாற்றங்களுடனும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

முடிஞ்சா என்னை தாண்டி தொடுங்கடா..! இணையத்தை கலங்கடிக்கும் எச். ராஜா மீம்ஸ்

66
விஜய் சேதுபதி பிக் பாஸ் தமிழ் சீசன் 9
Image Credit : Vijay TV Screen Shot

விஜய் சேதுபதி பிக் பாஸ் தமிழ் சீசன் 9

ஒவ்வொரு முறை ஒளிபரப்பு செய்யப்படும் போது ஏதாவது ஒரு தீம் இருக்கும். உதாரணத்திற்கு ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பது போன்று இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பாக்க பாக்க தான் புரியும்.. போக போக தான் தெரியும் என்ற தீம் வைத்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த சீசனின் டேக்லைன் “ஒண்ணுமே புரியல” என்பதாகும். இன்னும் 3 மணி நேரங்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில் புதிய புதிய புரோமோ வீடியோக்களை விஜய் டெலிவிஷன் வெளியிட்டு வருகிறது.

இட்லி கடையை ஓரம் கட்டி வசூலை வாரிக்குவிக்கும் காந்தாரா சாப்டர் 1.. முழு ரிப்போர்ட் இதோ

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் சேதுபதி
பிக் பாஸ் சீசன் 9
பிக் பாஸ் (தமிழ்)
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved