இட்லி கடையை ஓரம் கட்டி வசூலை வாரிக்குவிக்கும் காந்தாரா சாப்டர் 1.. முழு ரிப்போர்ட் இதோ
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் முதல் மூன்று நாட்களில் இந்தியாவில் பெரும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. படத்தில் வசூல் விவரங்களை பார்க்கலாம்.

காந்தாரா சாப்டர் 1 வசூல்
'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் அமோக வசூல் செய்து வருகிறது. மூன்றாவது நாள் மொழி வாரியான வசூல் விவரங்கள் இன்னும் வரவில்லை. ஆனால் முதல் இரண்டு நாட்களில், கன்னடத்தில் ரூ.33.1 கோடி, இந்தியில் ரூ.31 கோடி, தெலுங்கில் ரூ.24.75 கோடி, தமிழில் ரூ.10 கோடி, மலையாளத்தில் ரூ.9 கோடி வசூலித்துள்ளது. வர்த்தக கண்காணிப்பு தளமான sacnilk.com அறிக்கையின்படி, 'காந்தாரா சாப்டர் 1' மூன்றாவது நாளில் இந்தியாவில் நிகரமாக ரூ.55 கோடி வசூலித்துள்ளது.
காந்தாரா சாப்டர் 1 பாக்ஸ் ஆபிஸ்
இரண்டாம் நாளுடன் ஒப்பிடுகையில், படத்தின் வசூல் 19.5% வளர்ச்சி கண்டுள்ளது. இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை இப்படம் ரூ.46 கோடி வசூலித்திருந்தது. ரிஷப் ஷெட்டி இயக்கி, அவரே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் இந்திய நிகர வசூல் ரூ.162.85 கோடியாக உயர்ந்துள்ளது. முதல் நாளில் ரூ.61.85 கோடி வசூலித்த நிலையில், இரண்டாம் நாளில் வசூல் 25.63% சரிந்தது.
ரிஷப் ஷெட்டியின் காந்தாரா
விஜய் கிரகந்தூர் ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார். இதன் பட்ஜெட் ரூ.125 கோடி. இந்த கணக்கின்படி, மூன்று நாட்களில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் 'காந்தாரா சாப்டர் 1' அதன் பட்ஜெட்டை மீட்டு, தற்போது ரூ.37.85 கோடி லாபத்தில் உள்ளது. இது பட்ஜெட்டில் 30%க்கும் அதிகம்.
இட்லி கடையை முந்திய காந்தாரா
உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் மொத்த வசூல் ரூ.200 கோடியைத் தாண்டியுள்ளது. இரண்டு நாட்களில் இப்படம் உலகளவில் ரூ.148 கோடி வசூலித்திருந்தது. மூன்றாவது நாள் வெளிநாட்டு வசூல் விவரங்கள் இன்னும் வரவில்லை. ஆனால், இந்தியாவின் நிகர வசூலான ரூ.55 கோடியை சேர்த்தாலே, உலக வசூல் ரூ.200 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கலாம். தமிழில் தனுஷ் இயக்கத்தில் வெளியான இட்லி கடை வசூலை தாண்டி வருகிறது காந்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.