Bigg Boss Tamil Season 9 Probable Contestant List : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் உத்தேச போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன்று மாலை 9 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 8ஐ வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய நிலையில் 9ஆவது சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனுக்கான புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு வந்தது.

அதில் விஜய் சேதுபதி கோட் சூட் அணிந்துள்ளார். அவர் அணிந்திருக்கும் கோட்டில் பிக் பாஸ் லோகோ போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர் அணிந்திருக்கும் அந்த கோட்டின் விலை மட்டும் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றது. எனினும், அதன் உண்மையான விலை பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இந்த சூழலில் தான் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ஓடிடியில் 24 மணி நேரமும் லைவ் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது.

பிக்பாஸ் பெட்ரூமுக்குள்ள பாத் டப் – பாத்து ஷாக்கான விஜய் சேதுபதி – இன்னும் என்னென்ன வசதி இருக்கு தெரியுமா?

இந்த சீசனின் சிறப்பம்சங்கள்:

இந்த சீசனில் பறவைகள் மற்றும் விலங்குகள் என்று பிக் பாஸ் வீடு இரண்டு மாறுபட்ட மண்டலங்களாகப் பிரிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே போன்று பிக் பாஸ் டேக்லைனாக ஒண்ணுமே புரியல என்று வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விஜய் சேதுபதி பேசும் போது கூட பாக்க பாக்க தான் புரியும் போக போகத்தான் தெரியும் என்று புரோமோ வீடியோக்களில் கூறி வருகிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள்

இந்த கிராண்ட் லான்ச் நிகழ்ச்சியின் போதுதான் போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வப் பட்டியல் வெளியிடப்படும். எனினும், சமூக ஊடகங்களில் சில பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்களில் சிலர்:

அனைவரும் எதிர்பார்த்த ‘மிராய்’ ஓடிடி ரிலீஸ் எப்போது? - வெளியான தகவல்

  1. கனி திரு (குக் வித் கோமாளி பிரபலம்)
  2. ரோஷன் (மாடல் மற்றும் நடிகர்)
  3. மாலினி ஜீவரத்தினம் (திரைப்படத் தயாரிப்பாளர்)
  4. வீஜே பார்வதி
  5. கொங்கு மஞ்சுநாதன் (பட்டிமன்ற பேச்சாளர்)
  6. ஆதிரை சௌந்தரராஜன்
  7. வினோத் பாபு (சீரியல் நடிகர்)
  8. பிரித்திகா பிரவீன் காந்தி (இயக்குநர்)
  9. ஜனனி அசோக்குமார்
  10. கம்ருதீன் (சீரியல் நடிகர்)
  11. ரம்யா ஜோ
  12. ஆதிரை சௌந்தரராஜம்
  13. விஜே ஷோபனா
  14. அப்சரா விஜே 

என்று ஏராளமான பிரபலங்கள் இடம் பெறுகிறார்கள் என்று தெரிகிறது. எனினும் பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பரிசுத்தொகை ரூ.50 லட்சம் மட்டுமின்றி பிக் பாஸ் டிராபியும் வழங்கப்படும்.