அனைவரும் எதிர்பார்த்த ‘மிராய்’ ஓடிடி ரிலீஸ் எப்போது? - வெளியான தகவல்
இளம் நடிகர் தேஜா சஜ்ஜா, ‘ஹனு மேன்’ வெற்றிக்குப் பிறகு ‘மிராய்’ திரைப்படத்திலும் சாதனை படைத்துள்ளார். பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்ற இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

மிராய் ஓடிடி தேதி
தென்னிந்திய திரையுலகின் இளம் ஸ்டாராக உயர்ந்திருக்கும் தேஜா சஜ்ஜா, தனது சமீபத்திய ‘மிராய்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார். இளம் வயதிலேயே தேஜா சஜ்ஜா தன் நடிப்பால் தெலுங்கு திரையுலகில் பிரபலமானார். இரண்டு வயதில் ‘சூடாலானி வுண்டி’ (1998) படத்தின் மூலம் அறிமுகமான இவர், 20-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
தேஜா சஜ்ஜா
பிரபாஸ், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த அனுபவமுள்ள இவர், 2019-ல் ‘ஓ பேபி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் ‘ஹனு மேன்’ படம் மூலம் பாக்ஸ் ஆபிஸில் அதிரடி சாதனை படைத்தார். புராணத்தையும் பேண்டஸியையும் கலந்த மிராய், திரையரங்குகளில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
மிராய் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
கார்த்திக் கட்டமனேனி இயக்கிய இந்த பேண்டஸி-ஆக்சன் படம், ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவாகி, உலகளவில் ரூ.142 கோடி வசூலித்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்துள்ளது. பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்த இந்தப் படத்தில், தேஜா சஜ்ஜாவுடன் மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஜெயராம், ஸ்ரேயா சரண், ரித்திகா நாயக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மிராய் ஓடிடி வெளியீடு
ராணா டகுபதி சிறிய கேமியோ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ‘மிராய்’ படத்தைப் பற்றிய புதிய செய்தி வெளிவந்துள்ளது. இந்தப் படம் விரைவில் ஓடிடியில் வெளியாகிறது. செப்டம்பர் 12 அன்று திரையரங்குகளில் வெளியான ‘மிராய்’, வெற்றிகரமான திரையிடலுக்குப் பிறகு, அக்டோபர் 10 முதல் ஜியோ பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.