தலைவர் கொடுத்த முகூர்த்த புடவை... விஜய் வீட்டில் முதல் விருந்து..! திருமணம் குறித்து பகிர்ந்த ஆர்த்தி - கணேஷ்

பிக்பாஸ் ஜோடி சீசன் 2 நிகழ்ச்சியில், இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் திருமண நினைவுகளை பகிர்ந்து கொள்ள உள்ள நிலையில், கணேஷ் - ஆர்த்தியின் ப்ரோமோ வீடியோவை பார்த்து நீங்கள் ரொம்ப லக்கி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
 

biggboss jodi contestant haarthi sharing our marriage experience promo

பிக்பாஸ் ஜோடி சீசன் 2 நிகழ்ச்சியில், இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் திருமண நினைவுகளை பகிர்ந்து கொள்ள உள்ள நிலையில், கணேஷ் - ஆர்த்தியின் ப்ரோமோ வீடியோவை பார்த்து நீங்கள் ரொம்ப லக்கி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் தற்போது பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி மூலம் தங்களின் நடன திறமையை வெளிக்காட்டி வருகிறார்கள். அந்த வகையில், சிலர் ரீல் ஜோடிகளுடனும், சிலர் ரியல் ஜோடிகளுடனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர் என்பது நாம் அறிந்ததே. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில், நடுவர்களாக நடிகை ரம்யா கிருஷ்ணா மற்றும் நடன இயக்குனர் சதீஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

biggboss jodi contestant haarthi sharing our marriage experience promo

மேலும் செய்திகள்: பார்த்தாலே கிக் ஏறுது... ஸ்ட்ராப் லெஸ் கவுனில் கிளாமர் குயினாக மாறிய மிருணாளினி! லேட்டஸ்ட் போட்டோஸ்!
 

இந்த வாரம் முழுக்க திருமணம் குறித்த கான்செப்ட் வைத்து போட்டியாளர்கள் டான்ஸ் ஆடி வருகிறார்கள். அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள புரோமோவில்... நட்சத்திர தம்பதியான ஆர்த்தி - கணேஷ் ஜோடி தங்களின் திருமணம் குறித்த சுவாரஸ்ய தகவல்களையும், திருமணத்தில் நடந்த மறக்க முடியாத நினைவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ள வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

biggboss jodi contestant haarthi sharing our marriage experience promo

மேலும் செய்திகள்: தமிழ் ராக்கர்ஸில் புதிய படத்தை லீக் செய்த 2 பேர் அதிரடி கைது! விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்!
 

தன்னுடைய திருமணம் குருவாயூரியில் தான் நடந்ததாகவும், அதில் நிறைய பேர் ஜோடி ஜோடியாக நிற்க உடனே உடனே திருமணம் செய்வார்கள். எங்க அப்பா - அப்பா எல்லாரும் கிழே நிற்கும் போது... யார் யாரோ மேலே ஏறி இப்படி நில்லுங்க அப்படி நில்லுங்க என சொன்னார்கள். எனக்கு ஒன்னுமே புரியல, திருமணமே கொஞ்சம் குழப்பமாக தான் நடந்தது. தன்னுடைய கணவர் கணேஷ் தாலி கட்டி முடித்ததும் என் காலில் விழும் அளவிற்கு அவர் குழம்பி விட்டார் என தெரிவித்துள்ளார்.

 

 

இதை தொடர்ந்து பேசுகையில், தங்களின் முகூர்த்த புடவை மற்றும் தன்னுடைய கணவரின் வேஷ்டி ஆகியவை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எடுத்து கொடுத்தார். மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தங்களின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்தினார். தங்களுக்கான முதல் பரிசு விஜயகாந்த் அவர்களிடம் இருந்து வந்ததாகவும், பிரான்சில் இருந்து கமல்ஹாசன் சார் போன் செய்து வாழ்த்தினார். தங்களின் முதல் விருந்து தளபதி வீட்டில், சங்கீதா அக்காவின் கையால் சாப்பிட்டோம் என கூறியதும், நடுவர் சதீஷ் இதுக்கு மேல என்ன வேண்டும் என ஆச்சர்யத்துடன் கேட்டார். மேலும் இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நீங்கள் ரொம்ப லக்கி என்பது போல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios