மீண்டும் எப்போது? நயனுடன் கண்களால் காதல் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ஏக்கத்தை வெளிப்படுத்திய விக்கி!
நயன் - விக்கி இருவரும் தங்களுடைய இரண்டாவது ஹனி மூனுக்கு வாலன்சியா சிட்டிக்கு சென்றுள்ள நிலையில், அங்கிருந்து விக்கி வெளியிட்ட ஒற்றை புகைப்படத்தில் தன்னுடைய ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு பின் ஒரு முறை ஹனி மூன் செல்லும் வாய்ப்பே பலருக்கு கிடைக்காத நிலையில், திருமணத்திற்கு முன் டேட்டிங் என்கிற பெயரில் வெளிநாடுகளில் சுற்றி திரிந்த காதல் ஜோடியான நயன் - விக்கி தற்போது திருமணம் ஆகி விட்டதால் இரண்டாவது முறையாக ஹனி மூன் சென்றுள்ளனர்.
தற்போது ஸ்பெயின் நாட்டில் உள்ள 'வாலன்சியா' சிட்டியில் தங்களது ஹனி மூனை கொண்டாடி வரும் இந்த ஜோடி, அவ்வப்போது காதல் பொங்கும் கலக்கல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
மேலும் செய்திகள்: தவறான வார்த்தை தான்... 'கஞ்சா பூ கண்ணால' பாடல் வரிகளுக்கு மன்னிப்பு கேட்ட பாடலாசிரியர் மணிமாறன்..!
இயக்குனர் விக்னேஷ் சிவன், வாலன்சியாவில் தான் கண்டு ரசித்த பிரமாண்ட அழகை... ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, சில வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து, 'வாலன்சியா' என்கிற எழுத்துக்களின் மேல் நின்றபடி நயன் விக்கி இருவரும் கண்களால் காதல் செய்யும் ஒற்றை புகைப்படத்தை, இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.
மேலும் செய்திகள்: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்... சிங்கிள் ப்ளீட் சேலை கட்டி அழகு தேவதையாக மாறிய சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்!
மேலும் தன்னுடைய கனவு இடமான இந்த இடத்திற்கு மீண்டும் எப்போது வருவேன்... என தன்னுடைய ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரது இந்த பதிவுக்கு, ரசிகர்கள் சிலர் உங்களது விடுமுறை நாட்களை நீடித்து கொள்ளுங்கள் என கூறி வருகிறார்கள், இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.