பல பிரபலங்கள் கலந்து கொண்ட 'யாரடி நீ மோகினி' சீரியல் நடிகை நக்ஷத்ராவின் வளைகாப்பு! வைரல் போட்டோஸ்..
சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு மிகவும் பிரமாண்டமாக வளைகாப்பு நடந்த நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
வெள்ளித்திரை நடிகையாக சினிமாவில் காலடி எடுத்து வைத்த கேரளத்து கிளியான நக்ஷத்திரா சீரியல்கள் மூலம் தான் மிகவும் பிரபலமானார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான 'கிடாரி பூசாரி மகுடி' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நக்ஷத்திரா.
'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை அதிர்ச்சி மரணம்! சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை பிரபலங்கள்!
கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில், டஸ்கி ஸ்கின் பியூட்டியான நட்க்ஷத்ரா கதாபாத்திரத்தோடு ஒன்றி போய் நடித்தார். இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் வசூலில் தோல்வியை தழுவியது.
சில வருடங்கள் அடுத்த பட வாய்ப்புக்காக காத்திருந்த நக்ஷத்ரா பின்னர் சீரியலில் நடிக்க தயாரானார். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' சீரியலில் ஹீரோயினாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
நடிகை பரினீதி சோப்ரா - ஆம் ஆத்மி எம்பி நிச்சயதார்த்த கலர்புல் போட்டோஸ்!!
யாரடி நீ சீரியல் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமும் உருவானது. பரபரப்பாக சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே, கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விஷ்வா என்பவரை நக்ஷத்ரா கேரள முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
முன்பே திருமணம் செய்து அறிவிக்காத நக்ஷத்ரா திடீர் என திருமணம் செய்து கொண்டதால் ரசிகர்கள் ரகசிய திருமணமா? என கேள்வி எழுப்பினர்.
வாவ் அழகோ... அழகோ..! காதலருடன் இருக்கும் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பரினீதி சோப்ரா!
திருமணத்திற்கு பின்னர், கணவரோடு எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட இவர் இது ரகசிய திருமணம் இல்லை என்றும் சூழ்நிலை காரணமாக திடீர் என திருமணம் நடந்தகாக கூறினார்.
பின்னர் திருமணம் குறித்து கணவருடன் சேர்ந்து கொடுத்த பேட்டியில்... தன்னுடைய தாத்தாவுக்கு உடல் நலம் இல்லாத காரணத்தினால் திடீர் என திருமண ஏற்பாடு நடந்ததாக தெரிவித்தார்.
அவர் தன்னுடைய திருமணத்தை பார்க்க ஆசைப்பட்டதால் மிகவும் அவசர அவசரமாக இந்த திருமணம் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சீரியல்களில் கவனம் செலுத்தி வந்தார் நக்ஷத்திரா. ஹீரோயினாக நடித்த நக்ஷத்ரா அதிரடியாக 'வள்ளி திருமணம்' சீரியலில் வில்லி அவதாரம் எடுத்தார்.
இந்த சீரியல் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், திடீர் என கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
கர்ப்பமாக இருக்கும் நிலையிலும், கணவருடன் சேர்ந்து... ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ஒன்றிலும் கணவனுடன் கலந்து கொண்டுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸில் சுமார் கலெக்ஷன்... திரையரங்கில் காத்துவாங்கும் கஸ்டடி - 3 நாளில் இவ்வளவுதான் வசூலா?
இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு 5 மாத சீர் கொடுத்த நிலையில்... இவரின் 7 மாதத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த்துள்ளது. இதில் சின்னத்திரையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு நேரில் வாழ்த்தி உள்ளனர்.
நக்ஷத்திராவின் வளைகாப்பு போட்டோஸ், தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.