பாக்ஸ் ஆபிஸில் சுமார் கலெக்ஷன்... திரையரங்கில் காத்துவாங்கும் கஸ்டடி - 3 நாளில் இவ்வளவுதான் வசூலா?
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரிலீஸ் ஆன கஸ்டடி படத்தின் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. சென்னை 28 படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த வெங்கட் பிரபு, அடுத்தடுத்து சரோஜா, மங்காத்தா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கினார். இதையடுத்து இவர் இயக்கிய மாஸ் மற்றும் பிரியாணி ஆகிய திரைப்படங்கள் பிளாப் ஆகின. இதன்பின்னர் சிம்புவின் மாநாடு படம் மூலம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்து மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
மாநாடு படத்துக்கு பின்னர் வெங்கட் பிரபு இயக்க கமிட் ஆன திரைப்படம் கஸ்டடி. இப்படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் மூலம் இயக்குனர் வெங்கட் பிரபு தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும், வில்லனாக அரவிந்த் சாமியும் நடித்திருந்தனர்.
இதையும் படியுங்கள்... ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீசாகும் முன்பே... அடுத்த படத்துக்காக முன்னணி நடிகரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நெல்சன்
இப்படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜவும் இணைந்து இசையமைத்து இருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் கடந்த மே 12-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன முதல் நாளே இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இதனால் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் சரிவை சந்தித்தது. அதன்படி கஸ்டடி படம் ரிலீசான முதல் நாளில் தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளையும் சேர்த்து ரூ.3.2 கோடி வசூலித்து இருந்தது.
இதையடுத்து இரண்டாம் நாளில் ரூ.3 கோடி வசூலித்த இப்படத்தின் வசூல் ஞாயிற்றுக்கிழமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஞாயிறன்று இப்படத்தின் வசூல் மாபெரும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி நேற்று இப்படம் வெறும் ரூ.1.75 கோடி மட்டுமே வசூலித்து உள்ளதாம். விடுமுறை தினத்தில் கூட படத்திற்கு கூட்டம் வராததால் படக்குழு கடும் அப்செட்டில் உள்ளதாம்.
கஸ்டடி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் கடும் சரிவை சந்தித்து வருவதால் இப்படம் படு தோல்வியடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கஸ்டடி படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் நாகசைதன்யா ரூ.10 கோடி சம்பளமாக வாங்கினாராம். தற்போதுள்ள நிலை நீடித்தால், இப்படம் 10 கோடி வசூலிப்பதே சந்தேகம் தான் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கடன் வாங்கி தானம் பண்ண மனுஷன் அவரு... மயில்சாமி, மனோபாலா நினைவேந்தல் நிகழ்ச்சியில் உருக்கமாக பேசிய கார்த்தி