மும்பையில் செட்டிலானதும் இந்தி பட வாய்ப்பை தட்டிதூக்கிய ஜோதிகா... 25 ஆண்டுகளுக்கு பின் பாலிவுட்டில் ஜோ எண்ட்ரி
நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா மும்பையில் செட்டில் ஆனதும் தற்போது அவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. விஜய், அஜித், சூர்யா, கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்ட நடிகை ஜோதிகாவுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் பிறந்தனர். இதையடுத்து குழந்தைகள் வளர்ந்த பின்னர் மீண்டும் சினிமாவில் தன் செகண்ட் இன்னிங்சை தொடங்கினார் ஜோதிகா.
அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்த அவர், அதன்பின் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி நடிகர் சூர்யா உடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வரும் ஜோதிகா, அதன்மூலம் பல்வேறு தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.
இதையும் படியுங்கள்...திருமணமாகி 14 ஆண்டுகளுக்கு பின்... பெண் குழந்தைக்கு அம்மா ஆன குஷியில் விருமாண்டி பட நடிகை அபிராமி
அண்மையில் நடிகர் சூர்யாவுடன் மும்பையில் புதிதாக வீடு ஒன்று வாங்கி செட்டில் ஆனார் ஜோதிகா. குடும்ப பிரச்சனை காரணமாக அவர் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக தான் அங்கு செட்டில் ஆன தகவல் பின்னர் தெரியவந்தது. இந்நிலையில், தற்போது நடிகை ஜோதிகா, பாலிவுட்டில் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இந்தியில் விகாஸ் பாய் என்பவர் இயக்கத்தில் உருவாக உள்ள திரில்லர் திரைப்படத்தில் அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோருடன் நடிகை ஜோதிகாவும் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்மூலம் 25 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகை ஜோதிகா இந்தி படத்தில் நடிக்க உள்ளார். இதற்கு முன்னர் அவர் கடந்த 1998-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான டோலி சஜா கி ரக்னா என்கிற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... என்ன காண்டம் யூஸ் பண்றேன்னு கூட கேட்பியா... வம்பிழுத்த நெட்டிசனுக்கு பாத்திமா பாபு கொடுத்த செருப்படி ரிப்ளை