வாவ் அழகோ... அழகோ..! காதலருடன் இருக்கும் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பரினீதி சோப்ரா!
நடிகை பரினீதி சோப்ராவிற்கும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த , ராகவ் சாதாவுக்கும் இன்று டெல்லியில் உள்ள கபுர்தலாவில் திருமண நிச்சயதார்த்தம் மிகப்பிரமாண்டமாக முடிந்த நிலையில், அதன் புகைப்படங்களை பரினீதி வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் திரையுலகில் இளம் நடிகைகளில் ஒருவரான, பரினீதி சோப்ராவுக்கும், பிரபல அரசியல்வாதியுமான ராகவ் சத்தாவுக்கும் இன்று டெல்லியில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது
இந்த ஜோடி டேட்டிங் செய்து வருவதாக, ஏற்கனவே சில தகவல்கள் பரவிய போது , இருவருமே தங்கள் உறவைப் பற்றி வாய் திறக்காமல் இருந்தனர். தற்போது, பெற்றோர் சம்மதத்துடன் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் டெல்லியில் உள்ள கபுர்தலா ஹவுஸில் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
இந்த நிச்சயதார்த்த விழாவில், பரினீதி சோப்ரா மற்றும் ராகவ் குடும்பத்தை சேர்ந்த முக்கியமான நபர்களும், நெருங்கிய நண்பர்கள் 150 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
குறிப்பாக நடிகை பரினீதி சோப்ராவின் சகோதரியான ப்ரியங்கா சோப்ரா, இவரின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள இன்று டெல்லிக்கு வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் படு வைரலானது.
விரைவில் பரினீதி - ராகவ் திருமண தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்... சற்று முன்னர் நடிகர் பரினீதி காதலர் ராகவுடன் நிச்சயதார்த்தத்தின் போது எடுத்து கொண்ட ரொமான்டிக் போட்டோஸ் சிலவற்றை வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் ரசிகர்களும், தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.