சந்திரமுகி 2 படம் குறித்து வெளியான ஹாட் அப்டேட்!
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக்கி வரும் 'சந்திரமுகி 2' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.
இயக்குனர்.பி வாசு இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்த திரைப்படம் 'சந்திரமுகி'. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவித்தார் இயக்குனர் பி.வாசு.
அதன்படி இரண்டாம் பாகத்தின் கதையை எழுதிய பின்னர், பி வாசு அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைக்க முயற்சித்த நிலையில், கதையை கேட்டபின் ரஜினிகாந்த்... ஒரு சில மாற்றங்களை கதையில் செய்ய சொன்னதாகவும், ஆனால் ரஜினிகாந்த் சொன்ன அந்த மாற்றங்களை செய்தால் படத்தின் கதையே மாறிவிடும் என பி வாசு தெளிவு படுத்திய பின்னரும், ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்த முன்வரவில்லை என கூறப்பட்டது.
எனவே அதிரடியாக வேறு ஒரு நடிகரை வைத்து பி வாசு சந்திரமுகி 2 படத்தை இயக்க தயாரானார். மேலும் இந்த படத்தில் யாரை பி வாசு நடிக்க வைப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ராகவா லாரன்ஸ், ரஜினி நடித்த வேட்டையின் கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும் தெரிகிறது.
அதே போல்ஜோதிகா நடித்த சந்திரமுகி வேடத்தில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, பொன்னியின் செல்வன் படத்தின் கலை இயக்குனர் தோட்டா தரணி கலைப்பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கி வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த படம் குறித்து வெளியாகி உள்ள லேட்டஸ்ட் தகவலில், இம்மாதம் 17ஆம் தேதி முதல் மைசூரில் சந்திரமுகி 2 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் 15 நாட்களில் அந்த படத்தின் காட்சிகள் மொத்தமும் முடிவடைந்து, பின்னர் ரிலீஸ்க்கு தயாராகும் என கூறப்படுகிறது. சந்திரமுகி படத்தை இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.