திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்! வயிறு பெரிதாகி எப்படி இருக்கிறார் பாருங்க இலியானா... வைரலாகும் போட்டோஸ்!
நடிகை இலியானா கர்ப்பமாக இருக்கும் தகவலை சமீபத்தில் அறிவித்த நிலையில். தற்போது வயிறு பெரிதாகி கர்ப்ப காலத்தை சந்தோஷமாக அனுபவிக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த நடிகை இலியானா, தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தன்னுடைய திரைப்பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர். அந்த வகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு, தேவதாசு என்கிற திரைப்படத்தில் ராம் பொதேனிக்கு ஜோடியாக நடிகர். இந்தப் படம் தான் ராமுக்கும் அறிமுகப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, தெலுங்கு ரசிகர்களால் கவனிக்கப்படக்கூடிய நடிகையாக மாறிய இலியானா... தன்னுடைய இரண்டாவது படத்திலேயே தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு ஜோடி போட்டார். இதைத் தொடர்ந்து தமிழில் 'கேடி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு இலியானாவுக்கு கிடைத்த போதிலும், இப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார்.
Custody: படுதோல்வி அடைந்த 'சாகுந்தலம்' படத்தை விட குறைவான வசூல் செய்த நாக சைதன்யாவின் 'கஸ்டடி'!
நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தார் இலியானா. இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தமிழில் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இலியானாவுக்கு வலை விரித்த நிலையில், ஹிந்தி திரையுலகில் அம்மணியின் ஆதிக்கம் சென்று விட்டதால், ஏற்றி விட்ட ஏணியான தெலுங்கு திரையுலகிற்கே குட் -பை சொல்லிவிட்டு முழு நேர பாலிவுட் நடிகையாக மாறினார்.
பாலிவுட் பிரபலங்கள் லிஸ்டில் இணைந்து விட்ட பின்னர், மூடி வைத்த அழகை... பிகினி உடை போட்டோ ஷூட் செய்து வெளிச்சம்போட்டு காட்டிய நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் அன்ரூ ன்பவரையும் உருகி உருகி காதலித்து... அவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். ஆனால் இந்த காதல் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாகமுடிவுக்கு வந்தது.
Ileana DCruz
இந்த காதல் முறிவுக்கு பின்னர் நடிகை கத்ரீனா கைஃப் சகோதரர் செபஸ்டியனை இலியானா காதலித்து வருவதாக கூறப்பட்டது . மேலும் இருவரும் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு டேட்டிங் சென்று வருவதோடு, லிவிங் டூ கெதர் வாழ்க்கையிலும் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள் என கூறப்பட்ட போதிலும், இலியானா இதுவரை இதுகுறித்து வாய் திறக்கவில்லை.
Ileana DCruz
இந்நிலையில் இலியானா கடந்த ஓரித மாதத்திற்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் ஒரு குழந்தையின் ஆடையுடன்... மம்மா என்கிற டாலர் அணிந்து, கர்ப்பமாக இருக்கும் தகவலை வித்தியாசமாக தெரிவித்திருந்தார். இதை அடுத்து பலர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா என்பது போல் இலியானா விடம் கேள்வி எழுப்பி வந்தனர்.
Ileana DCruz
தற்போது தன்னுடைய கர்ப்ப காலத்தை சந்தோஷமாக அனுபவித்து வரும் இலியானா, முதல்முறையாக பெரிதாக இருக்கும் வயிறுடன் கருப்பு நிற டைட் உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.