Custody: படுதோல்வி அடைந்த 'சாகுந்தலம்' படத்தை விட குறைவான வசூல் செய்த நாக சைதன்யாவின் 'கஸ்டடி'!
நாக சைதன்யா நடிப்பில் நேற்று வெளியான 'கஸ்டடி திரைப்படம்' முதல் நாளில் 'சாகுந்தலம்' படத்தை விட குறைவான வசூலையே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை தமிழ் படங்களை மட்டுமே இயக்கிய இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபு... தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இயக்கியிருந்த திரைப்படம் 'கஸ்டடி'.
இப்படம் இதுவரை நாக சைதன்யா நடித்த படங்களிலேயே அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், இந்த படத்தில் சைதன்யாவுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். மேலும் முரட்டு வில்லனாக அரவிந்த் சாமியும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நேற்று பிரமாண்டமாக வெளியானது. நாகசைதன்யாவுக்கு கோலிவுட்டில் பெரிதாக மாஸ் இல்லாததால் சிறப்பு காட்சிகள் போடப்படாத நிலையில் , தெலுங்கானா மற்றும் ஹைதராபாத்தில் அதிகாலை காட்சிகளுடன் பிரம்மாண்ட ஓப்பனிங்கை கண்டது.
இதுவரை நாகசை தன்யா நடித்த படங்களில் இருந்து, இப்படம் சற்று வித்தியாசப்பட்டு இருந்தாலும்.... தொடர்ந்து கலவையான விமர்சனங்களையே தொடர்ந்து பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் பேக்ரவுண்ட் இசை மற்றும் பாடல்களும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாடல்களும் எடுபடவில்லை.
'தி கேரளா ஸ்டோரி' பட விவகாரம்! மேற்கு வங்கம் அரசு மற்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
இந்நிலையில் இந்த திரைப்படம் முதல் நாள் செய்த வசூல் குறித்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி உலகம் முழுவதும் நான்கு கோடி, மட்டுமே வசூலித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் படக்குழுவினரை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி படு தோல்வியை கண்ட சாகுந்தலம் திரைப்படம் முதல் நாளில், 5 கோடி வசூல் செய்தது நடிப்பிடத்தக்கது. எனவே சாகுந்தலம் படத்தை விட கஸ்டடி குறைவாக வசூலித்துள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில், ட்ரோல் செய்து வருகிறார்கள்.