யாருக்கும் தொந்தரவு தர கூடாது! சமையல்காரராக மாறி நடிப்பை கற்றுக்கொண்ட நம்பியார்.! பலருக்கு தெரியாத அரிய தகவல்!
சிறு வயதிலேயே பல கஷ்டங்களை கடந்து, நம்பியார் எப்படி நாடகத்தில், சேர்ந்து நடிகராக மாறினார் என்பது பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள் இதோ...
எத்தனையோ வில்லன் நடிகர்கள் வந்தாலும், அவர்களின் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவராக பார்க்கப்படுபவர் தான் எம்.என். நம்பியார். இவரின் நடிப்பு திறமையை பார்த்து வியர்ந்து தான், எம்.ஜி.ஆர் தனக்கு நிகரான வில்லன் என அவரையே பல படங்களின் நடிக்க வைத்தார்.
ஒரு படத்தின் வெற்றிக்கு ஹீரோ எந்த அளவிற்கு முக்கியமோ... அதே அளவிற்கு வில்லன் கதாபாத்திரமும் மிகவும் முக்கியம். ஹீரோவுக்கு நிகராக வில்லத்தனத்தை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மத்தியில் திட்டு வாங்கினால் அது தான் அவர்களின் மிகப்பெரிய வெற்றி.
M N nambiar
அப்படி அந்த காலத்தில், எம்.ஜி.ஆருக்கு வில்லனாக நடித்ததால்... பலரது கோப தாபங்களுக்கு ஆளானவர் தான் நம்பியார். கைகளை அரக்கிகொண்டு, முக பாவனையால் கூட வில்லத்தனத்தை நேர்த்தியாக வெளிப்படுத்த தெரிந்த மஹா கலைஞன்... நம்பியார் எப்படி இந்த சினிமா திரைக்குள் வந்தார் தெரியுமா?
கேரளாவை சேர்ந்த இவர், சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தார். அடுத்த வேலை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என கலங்கி நின்ற இவர், ஊட்டியில் தனது சகோதரியின் கணவரின் தயவில் வசித்துவந்தார். சகோதரியின் கணவர் ஊட்டியில் சொந்தமாக நடத்திய தேநீர் கடையில் வேலை செய்தார். ஒரு நிலையில் வியாபாரம் படுத்தது.
23 வயது சீரியல் நடிகையின் அம்மாவுக்கு குழந்தை பிறந்தது..! உச்சகட்ட மகிழ்ச்சியில் குடும்பம்..!
இவர்களுக்கு ஏன் நாம் பாரமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அந்த நம்பியார், நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை என்பவரின் நாடகக்குழுவில் சேர்ந்தார். ஆனால் அந்த நாடகக்குழுவில் அவர் நடிகராக சேரவில்லை. அங்குள்ள நடிகர்களுக்கு சமைத்துப்போடும் சமையல்காரரின் உதவியாளராக பணிபுரிந்தார். மூன்று வேளையும் சாப்பாடும் கிடைத்ததே தவிர சம்பளம் என எதுவும் கிடைக்கவில்லை.
நாடகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டது. அங்குள்ள நாடக நடிகர்களை பார்த்து பார்த்து... இவருக்கும் நாடகத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதன் பின் மெல்ல மெல்ல அவருக்கு அந்த நாடகக்குழுவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ரத்த காயங்களுடன் நடிகை சமந்தா..! அதிர்ச்சியோடு.. அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய புகைப்படம்..!
“ராமதாஸ்” என்று ஒரு நாடகத்தை அந்த நாடக்குழு அரங்கேறியது. அந்த நாடகத்தை படமாக்கவேண்டும் என்று ஒரு தயாரிப்பாளர் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளையை அணுகினார். அப்போது ராஜமாணிக்கம்பிள்ளை “தாராளமாக படமாக்குங்கள். ஆனால் இந்த நாடகத்தில் நடித்த நடிகர்களைத்தான் அந்த படத்திலும் நடிக்க வைக்க வேண்டும்” என்று கூறினாராம். அந்த நாடகத்தில் நம்பியாரும் நடித்திருந்ததால் அவருக்கு அத்திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அப்படித்தான் அந்த நம்பியார் “பக்த ராமதாஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். இவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, பின்னாளில் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் திரைப்படங்களில் மிரட்டல் வில்லனாக மாறினார் எம்.என்.நம்பியார்.
நடுரோட்டில் ஆண் நபருடன் சண்டை போட்ட துணை நடிகை..! அத்துமீறியதாக பரபரப்பு குற்றச்சாட்டு..!