23 வயது சீரியல் நடிகையின் அம்மாவுக்கு குழந்தை பிறந்தது..! உச்சகட்ட மகிழ்ச்சியில் குடும்பம்..!
23 வயதாகும் பிரபல சீரியல் நடிகையின் தாயார், ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ள சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பொதுவாக குழந்தைகளுக்கு நினைவு தெரியும் வயது வந்துவிட்டால் பெற்றோர் மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்த்து விடுவது வழக்கம். ஆனால், வெளிநாடுகளில் பிள்ளைகள் கல்லூரி படிக்கும் போது கூட குழந்தை பெற்றுக் கொள்வது வழக்கம்.
ஆனால் சமீப காலமாக, சூழ்நிலைகள் காரணமாக 45 வயதை கடந்த பின்னர் சிலர் குழந்தை பெற்று கொள்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் பிரபல சீரியல் நடிகை ஆர்யா பார்வதி வீட்டில் நடந்துள்ளது.
மலையாள சீரியல் நடிகையான ஆர்யா பார்வதிக்கு 23 வயது ஆகும் நிலையில், இவருடைய தாயாருக்கு தற்போது 47 வயதில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். முதல் குழந்தையோடு போதும் என நிறுத்திக்கொண்டு அவருடைய பெற்றோர், சுமார் 23 வருடங்கள் கழித்து இரண்டாவது குழந்தைக்கு பெற்றோராகி உள்ளனர்.
சீரியல் நடிகையாக இருக்கும் ஆர்யா பார்வதி பள்ளி படிப்பை மட்டுமே வீட்டில் இருந்த முடித்த நிலையில், கல்லூரி படிப்பை வெளியே தங்கி படித்தாக கூறப்படுகிறது. அதைப்போல் படித்து முடித்த பின்னர், நடனம், மாடலிங், போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்தார். இவர் அவ்வப்போது வீட்டுக்குவந்தாலும் அடிக்கடி சீரியல் ஷூட்டிங் காரணமாக வெளி ஊருக்கு செல்வது வழக்கம்.
ரத்த காயங்களுடன் நடிகை சமந்தா..! அதிர்ச்சியோடு.. அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய புகைப்படம்..!
இந்நிலையில், ஆர்யா பார்வதியின் தாயார் திடீர் என தந்நடுய்ய 47 வயதில் கற்பமாகியுள்ளார். ஆரம்பத்தில் கர்ப்பமானது தெரியாமல் இருந்த இவருக்கு, சில மாதங்கள் கழித்து தான் கர்ப்பம் தரித்த தகவலே தெரியவந்துள்ளது. திருமண வயதில் மகள் உள்ளதால், அவரிடம் இதை சொல்ல முடியாமல்... ஒரு பக்கம் தவித்தாலும், குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அசையும் இருந்தது.
ஒருவழியாக இதுகுறித்து ஆர்யா பார்வதிக்கு தெரியவர அவர் உச்ச கட்ட மகிழ்ச்சியில் குதித்துள்ளார். சகோதரி என்பதை தாண்டி, மற்றொரு அம்மாவாக மாறி குழந்தையை வளர்க்க ஆசைப்பட்டார். சமீபத்தில் கூட இந்த தகவலை மிகவும் மகிழ்ச்சியோடு, ஆர்யா பார்வதி வெளிப்படுத்திய நிலையில், தற்போது அவரின் தாயாருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ள தகவலை வெளியிட்டுள்ளார்.
நடுரோட்டில் ஆண் நபருடன் சண்டை போட்ட துணை நடிகை..! அத்துமீறியதாக பரபரப்பு குற்றச்சாட்டு..!
ஆர்யா பார்வதி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்... தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குழந்தையை கையில் ஏந்தியபடி கொஞ்சும் வீடியோ ஒன்றாயும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் கூட பிரபல இயக்குனரும் நடிகருமான ஆர் .ஜே.பாலாஜி நடித்த வெளியான 'வீட்டுல விசேஷம்' என்கிற திரைப்படத்தில், பிள்ளைகள் எல்லாம் பெரிதாக வளர்ந்த பின்னர் ஊர்வசி கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக் கொள்வார். இதை மையப்படுத்தியே இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் வெளியான 'பதாய் ஹோ' படத்தின் ரீமிக்காக எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு கோலிவுட் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.