MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரத்த காயங்களுடன் நடிகை சமந்தா..! அதிர்ச்சியோடு.. அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய புகைப்படம்..!

ரத்த காயங்களுடன் நடிகை சமந்தா..! அதிர்ச்சியோடு.. அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய புகைப்படம்..!

நடிகை சமந்தா தற்போது ரத்த காயங்களுடன் வெளியிட்டுள்ள ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், சமந்தாவின் கேப்ஷனும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 28 2023, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை சமந்தா தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பட வாய்ப்புகளையும் கைப்பற்றி நடிக்க துவங்கி விட்டார். இவரின் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம் நடிப்பின் மீது இவருக்கு உள்ள அர்ப்பணிப்பு எனலாம்.
 

29

இயக்குனர் கவுதமி மேனன் இயக்கிய 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனாக எடுக்கப்பட்ட 'ஏ மாயா சேஸாவா'  படத்தில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் சமந்தா.  தமிழினும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். 

நடுரோட்டில் ஆண் நபருடன் சண்டை போட்ட துணை நடிகை..! அத்துமீறியதாக பரபரப்பு குற்றச்சாட்டு..!
 

39

தன்னுடைய முதல் பட ஹீரோவானாக நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாகவும் மாறியது. இருவரும் அவ்வப்போது டேட்டிங் செய்து வந்த நிலையில்,  சுமார் ஏழு வருடங்கள் உருகி உருகி காதலித்து வந்த சமந்தா பெற்றோர் சம்மதத்துடன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
 

49

இவர்களின் திருமணம் இந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும், கோவாவில் படு பிரமாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். குறிப்பாக சூப்பர் டீலக்ஸ், யூடர்ன் மற்றும் பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் போன்றவற்றில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
 

செக்சியான ரியாக்ஷனோடு.. கட்டழகை காட்டி மூச்சுமுட்ட வைத்த கீர்த்தி சுரேஷ்! பார்த்தாலே பற்றி கொள்ளும் ஹாட் photo

59

பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு, திடீரென தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருமே தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். இது சமூக வலைதளத்தில் மிகப்பெரிய விவாதங்களுக்கு ஆளான நிலையில், சில மாதங்கள் விவாகரத்து காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்த சமந்தா, ஆன்மீக பயணம் மற்றும் தன்னை தொழில் ரீதியாக பிசியாக வைத்து கொண்டார்.
 

69
samantha

samantha

ஒருவழியாக சமந்தா கணவருடனான விவாகரத்து சர்ச்சையில் இருந்து மீண்டு, மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கிய நிலையில் மயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டார்.  சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் எழுந்து நடக்கக் கூட முடியாமல் அவதிப்பட்டு வந்த சமந்தா, பல்வேறு சிகிச்சைகளுக்குப் பின்னர் மீண்டும் அதில் இருந்து மீண்டு, பழையபடி உடற்பயிற்சி ஷூட்டிங் பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

துளியும் மேக்கப் இன்றி... சொட்ட சொட்ட மழையில் நனைந்தபடி முத்தம்! கிக் ஏற்றும் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!
 

79

அதன்படி,  தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கும் குஷி மற்றும் பாலிவுட் தொடரான சீட்டாடல் போன்ற வற்றில் நடித்து சமந்தா நடித்து வருகிறார்.

89

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு ஏற்பட்ட ரத்த  காயத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்து உள்ளார்.

50 ஆவது பிறந்தநாளை 'லியோ' படக்குழுவினருடன் கொண்டாடிய கெளதம் மேனன்..! வைரலாகும் புகைப்படம்..!

99

அதில் இது உலகத்திற்கு காயமாக தெரியலாம், ஆனால் நாங்கள் இதை நகைகள் போன்று நினைப்பதாக பதிவித்துள்ளார். சமந்தா அர்ப்பணிப்போடு கூறியுள்ள வார்த்தை ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. மேலும் பலரும் சமந்தாவை பாராட்டி வருகிறார்கள். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தலைவா பட ‘டைம் டூ லீடு’ டேக் லைன் நான் போடல... அது அவரோட ஐடியா - ஏ.எல்.விஜய் பகிர்ந்த சீக்ரெட்
Recommended image2
அடேங்கப்பா... ஒரு நாளைக்கு 15 கோடி சம்பளமா? காஸ்ட்லி வில்லனாக உருவெடுத்த கமல்ஹாசன்
Recommended image3
என்ன விளையாடுறியா? இதை நாலு செவுத்துக்குள்ள வச்சுக்கய்யா! விஜய்யை கடுமையாக எச்சரித்த சமுத்திரக்கனி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved