துளியும் மேக்கப் இன்றி... சொட்ட சொட்ட மழையில் நனைந்தபடி முத்தம்! கிக் ஏற்றும் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!
நடிகை அமலா பால், சொட்ட சொட்ட மழையில் நனைந்தபடி... முத்தமிடும் சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான அமலா பால் எப்போதுமே சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாதவர். சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவா செயல்படும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
ஏற்கனவே சிவராத்திரியை முன்னிட்டு, வெளிநாட்டில் உள்ள சிவன் கோவில் ஒன்றில்... குளத்தில் குளித்தபடி இவர் வெளியிட்ட புகைப்படங்கள், படு வைரலாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது துளியும் மேக்கப் இன்றி சில புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
நீல நிற ஷார்ட் அணிந்து, கொட்டும் மழையில்... நனைந்தபடி இயற்கையை ரசிக்கிறார் அமலா பால். அழகிற்காக வைக்கப்படும் வாழை மரத்தில் இருக்கும் கலர் ஃபுல் பூவை பார்த்ததுமே காதலில் விழுந்து விட்டதாக முத்தமழை பொழிந்துள்ளார்.
இது குறித்த சில புகைப்படங்களை இவர் வெளியிட ரசிகர்கள் தங்களின் லைக்குகளை குவித்து வருகிறார்கள். மேலும் மேக்கப் இல்லாமல் பார்க்க அமலா பால் அதீத அழகில் ஜொலிப்பதாக பல நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
மிக மோசமான கவர்ச்சி உடையில் விருது விழாவிற்கு வந்த ராஷ்மிகா மந்தனா..! சன்னி லியோனுக்கே போட்டியா?
தற்போது தன்னுடைய வெகேஷனை என்ஜோய் செய்து வரும் அமலா பாலின் கைவசம் தற்போது சில மலையாள படங்கள் மட்டுமே உள்ளது. தமிழில் இவர் நடித்து முடித்துள்ள 'அதோ அந்த பறவை போல' திரைப்படமும் இன்னும் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எப்படியும் பட வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என்கிற முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள அமலா பால், வேகேஷன் ட்ரிப்பை போட்டோ ஷூட் களமாக மாற்றி கவர்ச்சியில் ரசிகர்களை திணறடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
50 ஆவது பிறந்தநாளை 'லியோ' படக்குழுவினருடன் கொண்டாடிய கெளதம் மேனன்..! வைரலாகும் புகைப்படம்..!